Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th October 2022 12:54:02 Hours

ஓய்வுபெறும் கஜபா படையணியின் சிரேஷ்ட அதிகாரிக்கு இராணுவத் தளபதியின் வாழ்த்துகள்

கஜபா படையணியின் ஓய்வுபெறும் 22 வது படைப்பிரிவின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபிடபிள்யூடபிள்யூஆர்எஸ்பி அலுவிஹாரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் அழைப்பின் பேரில் திங்கட்கிழமை (3) இராணுவத் தளபதியை சந்தித்தார்.

இராணுவத்தில் 32 வருடங்களுக்கும் மேலாக முன்மாதிரியான முறையில் சேவையாற்றி, விரைவில் ஓய்வுபெறவுள்ள மேஜர் ஜெனரல் டபிள்யூபிடபிள்யூடபிள்யூஆர்எஸ்பி அலுவிஹாரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் இச் சந்திப்பின் போது இராணுவத் தளபதியிடமிருந்து பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றார்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள், ஒய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரியின் இராணுவப் பணித்திறன், அர்ப்பணிப்பு மற்றும் சேவைகள் ஆகியவற்றைப் பாராட்டினார்.மே 2009 க்கு முன்னர் மிக உயர்ந்த திறன் கொண்ட காலாட் படையணியின் அதிகாரியாகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் உச்சக்கட்டத்தின் போது விலைமதிப்பற்ற தியாகங்கள் மற்றும் அர்ப்பணிப்புப் பணிகளின் நினைவுகளை அவர் நினைவுகூர்ந்தார். வருகை தந்த விருந்தினருடன் சில இன்பங்களைப் பகிர்ந்து கொண்ட இராணுவத் தளபதி, பாடசாலை நாட்களின் வகுப்புத் தோழர்களையும் அவர்களின் பாடசாலை நாட்களையும் தளபதி நினைவு கூர்ந்தார்.ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால முயற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியும் இராணுவத் தளபதியின் வாழ்த்துக்களுக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி தெரிவித்ததுடன், தனது கடமைகளை நிறைவேற்றுவதில் தாம் பெற்ற ஊக்கத்தையும் குறிப்பிட்டார். கலந்துரையாடலின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் ஓய்வு பெறும் மேஜர் ஜெனரல் டபிள்யூபிடபிள்யூடபிள்யூஆர்எஸ்பி அலுவிஹாரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களுக்கு சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கினார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த சிரேஷ்ட அதிகாரி, போர்க்களத்தில் முக்கிய பங்கு வகித்தார்; குறிப்பாக மனிதாபிமான நடவடிக்கையின் சகாப்தத்தில், வடக்கு மற்றும் கிழக்கின் நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டு, எதிரிகளின் முக்கிய இடங்களைக் கைப்பற்ற தனது படையணிக்கு கட்டளையிட்டதன் மூலம் சிறப்பினை பெற்றுள்ளார்.மேலும், சிரேஷ்ட அதிகாரி சிப்பாய்களின் பயிற்சியை முன்னெடுப்பதில் மகத்தான பங்களிப்பை வழங்கியதுடன், அவர் கட்டளை அதிகாரியாக மற்றும் பயிற்சி பாடசலை தளபதியாக கடமையாற்றிய காலத்தில் இராணுவ வீரர்களின் இராணுவ பயிற்சியின் தரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றினார். மேஜர் ஜெனரல் தரத்தில் உள்ள ஒரு சிரேஷ்ட அதிகாரிக்கு மதிப்புமிக்க நியமனங்களில் ஒன்றான 22 வது படைப்பிரிவின் தளபதியாக அவர் நியமிக்கப்பட்டார்.

மேஜர் ஜெனரல் டபிள்யூபிடபிள்யூடபிள்யூஆர்எஸ்பி அலுவிஹாரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ 1988 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் கெடட் அதிகாரி சேர்க்கப்பட்டார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்லூரி மற்றும் பாகிஸ்தான் இராணுவ கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர் இரண்டாம் லெப்டினன் பதவிக்கு 09 ஜூன் 1990 அன்று கஜபா படையணியிக்கு நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் அடுத்தடுத்த பதவிகளுக்கு படிப்படியாக உயர்த்தப்பட்ட பின்னர், 07 மே 2021 அன்று மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரேஷ்ட அதிகாரி இலங்கை இராணுவத்தில் பணிபுரிந்த காலத்தில் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவையைப் பாராட்டி ரண விக்கிரம பதக்கம், ரண சூர பதக்கம், கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், வடக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், பூர்ண பூமி பதக்கம், வடக்கு மற்றும் கிழக்கு நடவடிக்கை பதக்கம் மற்றும் கிளாஸ் 1, ரிவிரேச பிரச்சார சேவை பதக்கம், 50 வது சுதந்திர தின நினைவு பதக்கம், இலங்கை இராணுவத்தின் 50 வது ஆண்டு பதக்கம். இலங்கை இராணுவ சேவைகள் நீண்ட சேவை பதக்கம் மற்றும் கிளாஸ்ப், சேவாபிஹிமானி பதக்கம் ஆகிய வீரம் மற்றும் சேவைப் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.