Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th October 2022 18:06:29 Hours

விரைவில் ஓய்வு பெற்று செல்லும் சிரேஷ்ட அதிகாரியின் சேவைக்கு பாராட்டு

ஓய்வுபெற்றுச் செல்லும் 59 வது படைப் பிரிவின் தளபதியான இலங்கை கவச வாகன படையணியின் மேஜர் ஜெனரல் ஜிடி சூரியபண்டார யுஎஸ்பி அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை இராணுவத் தலைமையகத்தில் வைத்து திங்கட்கிழமை (3) சந்தித்தார்.

இச் சந்திப்பின் போது, இராணுவத் தளபதி, அவரது குறிப்பிடத்தக்க சேவை மற்றும் பல்வேறு பொறுப்புகள், அயராத அர்ப்பணிப்பு சேவையினை பாராட்டினார். மே 2009 க்கு முன்னர் ஒரு கவச வாகன படையணி அதிகாரியாக பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் இறுதி கட்டத்தில் விலைமதிப்பற்ற தியாகங்கள் மற்றும் அர்ப்பணிப்புப் தொடர்பான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். இந்த சிரேஷ்ட அதிகாரி இராணுவத்தில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி, விரைவில் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடதக்கதாகும்.

இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்ட அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்ட இராணுவத் தளபதி, ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால முயற்சிகள் மற்றும் திட்டங்களை ஆராய்ந்து அவருக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இராணுவ கடமையில் இருந்து ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரியின் கடமையை ஆதரித்து, அவரது குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய விலைமதிப்பற்ற ஆதரவையும் பாராட்டினார்.

ஓய்வுபெற்று செல்லும் சிரேஷ்ட அதிகாரியும் இராணுவத் தளபதியின் வாழ்த்துக்களுக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி தெரிவித்த அவர் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் தளபதியிடம் இருந்து தாம் பெற்ற ஊக்கத்தையும் குறிப்பிட்டார். உரையாடலின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் குடும்பத்திற்கு சிறப்புப் பரிசு பாராட்டு மற்றும் பாராட்டுக்கான சிறப்பு நினைவுச் சின்னத்தையும் வழங்கினார்.

மேஜர் ஜெனரல் சூரியபண்டார 1986 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி தேசிய ஆயுதப் படையில் இணைந்து கொண்டார். அவர், குறுகிய சேவை ஆணையத் திட்டத்தில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், 1988 ஜனவரி 01 இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணி இரண்டாம் லெப்டினன் தரத்தில் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியில் இணைக்கப்பட்டார். இந்த சிரேஷ்ட அதிகாரி 1990 ஜனவரி 01 இலங்கை கவச வாகன படையணிக்கு இணைக்கப்பட்டு 2021, மே 07 ஆம் திகதி மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடதக்கதாகும்.

அவர் ஓய்வுபெறும் போது 59 வது காலாட்படைப் பிரிவின் தளபதியாக நியமிக்கப்பட்டார். படையினர்களுக்கான தலைவர், படைத் தளபதி, பாதுகாப்புக் குழுத் தளபதி, இரண்டாம் நிலைத் அதிகாரி, பதவி நிலை அதிகாரி 2 (விநியோகம்), கட்டளை அதிகாரி, நிலைய தளபதி மற்றும் பிரிகேட் தளபதி ஆகிய பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.

இவர் உத்தம சேவா பதக்கம், கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், வடக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம் மற்றும் க்ளாஸ்ப், பூர்ண பூமி பதக்கம், வடக்கு மற்றும் கிழக்கு நடவடிக்கை பதக்கம், மற்றும் கிளாஸ் I மற்றும் II, ரிவிரேச பிரச்சார சேவை பதக்கம் மற்றும் கிளாஸ்ப், 50 வது சுதந்திர ஆண்டு விழா நினைவுப் பதக்கம், இலங்கை இராணுவத்தின் 50 வது ஆண்டு விழா பதக்கம், இலங்கை ஆயுத சேவைகள் நீண்ட சேவை பதக்கம் மற்றும் கிளாஸ்ப், சேவாபிமானி பதக்கம் மற்றும் சேவா பதக்கம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.