Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th September 2022 17:00:36 Hours

இராணுவத் தளபதி மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் முதல் விஜயத்தில் படையினருக்கு உரை

படையினரைச் சந்திக்கும் நோக்கில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், வெள்ளிக்கிழமை (29) தியத்தலாவை மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேஎஸ் சில்வா ஆர்டப்ள்யூபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்களின் அழைப்பின் பேரில் தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலில், 23 வது கஜபா படையணியின் படையினர்களால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டு, அன்றைய பிரதம அதிதியை கௌரவிப்பட்டு மத்திய பாதுகாப்புப் படை தலைமையக மத்திய தளபதியினால் அன்புடன் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பயிற்சிப் பாடசாலை அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில் மரியாதை செலுத்த அவர் அழைக்கப்பட்டார்.

வருகையின் நினைவுகளைச் சேர்க்கும் வகையில் இராணுவத் தளபதி மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பணிநிலை அதிகாரிகளுடன் புகைப்படங்கள் எடுக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டர். அதனைத் தொடர்ந்து தலைமையக வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டி இராணுவத் தளபதியாக தனது முதல் விஜயத்தை அடையாளப்படுத்தினார்.

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் அனைத்துப் படைப்பிரிவுகள், பிரிகேட்கள் மற்றும் படையலகுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றுவதற்காக இராணுவத் தளபதி அழைக்கப்பட்டார், மேலும் இராணுவத் தளபதியின் உரையின் போது கடமைகளின் முக்கியத்துவம் மற்றும் தொழில்முறை அறிவை தொடர்ந்து மேம்படுத்துவதற்கான தேவை, தற்போதைய இராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் பசுமை விவசாய செயற்பாடுகள் மற்றும் நிறுவனத்தில் ஒழுக்கத்தின் மிக உயர்ந்த தரத்தை பராமரிப்பதற்கான தேவைகள் குறித்தும் இதன் போது எடுத்துறைத்தார்.

உரையின் இறுதியில், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேஎஸ் சில்வா ஆர்டபிள்யூபி ஆர்எஸ்பி என்டியு அவர்கள் இராணுவத் தளபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி விஜயத்திற்கு நன்றி பாராட்டினார்.

11 மற்றும் 12 வது படைப்பிரிவுகளின் தளபதிகள்,மத்திய முன்னரங்கு பராமரிப்பு தளபதி, பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.