Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd September 2022 16:21:48 Hours

இராணுவ தொண்டர் படையணியில் ‘திறன் மேம்பாடு மற்றும் புத்தாக்கம்’ எனும் தலைப்பில் 2ம் செயலமர்வு ஆரம்பம்

‘திறன் மேம்பாடு மற்றும் புத்தாக்கம் எனும் தலைப்பிலான இரண்டாம் செயலமர்வு 2022 செப்டெம்பர் 20 அன்று இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களின் கருத்தியல் மற்றும் அறிவுறுத்தலின் கீழ் இந்த செயலமர்வு முன்னெடுக்கப்பட்டுகின்றது. எதிர்வரும் ஆண்டுகளில் முக்கியமாக நிறுவன நோக்கங்களை உணர இந்த செயலமர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.

21 நாட்கள் கொண்ட இந்த செயலமர்வு மறுசுழற்சி மற்றும் புத்தாக்கங்களிற்கு ஊக்கமளிக்கும் முயற்சியாக இந்தத் திட்டம் செயல்படுகிறதுடன் பாடநெறி காலம் முடிவடையும் போது தேவையான அறிவு மற்றும் திறன் மேம்பாடு எதிர்பார்க்கப்படுகிறது. குழு செயற்பாடு, கழிவு முகாமைத்துவம், மின்னொட்டு (வெல்டிங்), பூச்சு பூசுதல் மற்றும் தட்சு மூலம் புத்தாக்கங்களை உருவாக்கல் உள்ளடக்கிய நடைமுறை அமர்வுகளும் நடைபெற்றன.

30 சிப்பாய்களைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட குழு, பாடநெறியின் நிர்ணயிக்கப்பட்ட காலம் முழுவதும் இரண்டாம் கட்ட பயிற்சித் திட்டத்தில் கலந்து கொண்டனர். முடிவில் திறனைப் பெற்றவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் எம்.துசித சில்வா அவர்கள் ஆரம்ப உரையை நிகழ்த்தினார்.