Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd September 2022 14:31:52 Hours

இராணுவத்தின் 73 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கதிர்காமத்தில் மதஆசீர்வாத பூஜைகள்

இராணுவத்தின் 73 வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு (ஒக்டோபர் 10) அனைத்து மதங்களினதும் மத ஆசீர்வாத நிகழ்வுகளின் ஓர் அங்கமாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் பங்கேற்புடன் புனித கதிர்காமம் கிரிவெஹர மற்றும் கதிர்காம கந்தன் ஆலய வளாகத்தில் புதன்கிழமை (21) ஆரம்பமாகியது. இந்த நிகழ்விற்கு, இராணுவத் தளபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்து கொண்டனர்.

அனைத்து இராணுவப் படையணிகள், பாதுகாப்புப் படைத் தலைமையகம், பயிற்சி பாடசாலைகள், படைப்பிரிவுகள், பிரிகேட்கள், படையலகுகள் ஆகியவற்றின் கொடிகளை ஏந்தி 'கிரிவெஹர' தூபியை மூன்று முறை சுற்றி வருவதற்கு முன்னதாக இராணுவத்தின் மேளக்காரர்களின் அணிவகுப்புடன் ஊர்வலம் இடம்பெற்றது. அத்துடன் சமயம் நிகழ்வாக சிறப்பு ‘கப்ருக’ பூஜை இடம் பெற்றதுடன் அனைவரும் ஒன்றிணைந்து வளாகத்தை சுற்றி விளக்குகள் ஏற்றிவைக்கப்பட்டதன் பின்னர், ‘கிலான்பச’ பூஜையையும் அன்றைய தினம் இடம்பெற்றது.

கிரிவெஹரையின் பௌத்த பிக்கு வண. கோபவக தம்மிந்த தேரர், மகா சங்க உறுப்பினர்களுடன் சமய வழிபாடுகளை மேற்கொண்டதன் பின்னர், அன்றைய தின பிரதம அதிதி மகா சங்க உறுப்பினர்களுக்கு ‘பிரிகர’ வழங்கினார். இதனை தொடர்ந்து மத அனுஷ்டானங்களுக்காக கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு கொடி ஏந்தியவர்கள் மீண்டும் அணிவகுத்து சென்றதுடன், வெள்ளைத் தாமரை மலர்களால் ஆன மாலைகளுடன் கூடிய சிறப்பு பூஜை கதிர்காமம் முருகன் ஆலயத்தில் இடம்பெற்றது.

அதே சந்தர்ப்பத்தில் இராணுவத் தளபதி, வரலாற்று மதிப்புமிக்க புனித தலத்தின் அபிவிருத்திக்காக நிதி நன்கொடையினை வழங்கினார். கிரிவெஹெரவின் விகாராதிபதி வண கோபவக தம்மிந்த தேரர் அன்பளிப்பை ஏற்றுக்கொண்டார்.

இராணுவக் கொடி ஏந்தியவர்கள் மற்றும் 'ஹெவிசி' குழுக்களைக் கொண்ட ஊர்வலம் வளாகத்திற்குச் சென்றது, அங்கு கொடிகள் இராணுவத் தளபதிக்கு வழங்குவதற்காக சிரேஷ்ட அதிகாரிகள் அணிவகுத்து நின்றனர். வளாகத்தில் உள்ள ‘அஷ்டபாலபோதியவில் சமய அனுஷ்டானங்களில் இராணுவத் தளபதி புனித மரத்திற்கு ‘அட்டபிரிகரையினை படைத்தார்.

ஆலயத்தின் வழக்கமான பூஜை ஆரம்பமாகியதும், ஆசீர்வாதத்திற்காக கொடிகளை தளபதி வழங்கினார். புனித இடத்தின் அபிவிருத்திக்கான மற்றுமொரு நிதி நன்கொடையும் இராணுவத் தளபதியினால் கதிர்காமம் முருகன் ஆலய பஸ்நாயக்க நிலமே அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு 'முருக பிரசாதம் விநியோகிக்கப்பட்டதுடன், பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சி.டி.வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியு, இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத் யாப்பா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியு, மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேஎஸ் சில்வா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியு, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜீடபிள்யூபிடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்கிரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியு, பீஎஸ்சி , 12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி ஆகியோரும் கலந்து கொண்டனர்.