Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th September 2022 19:31:38 Hours

சர்வதேச விளையாட்டுகளில் சாதனை பெற்ற இராணுவ சாதனையாளர்களுக்கு பதவி உயர்வுகள் மற்றும் ஊக்கத்தொகைகள்

சர்வதேச விளையாட்டுத் துறையில் தனித்துவமாக சாதனை படைத்த இராணுவ சாதனையாளர் ஆண் மற்றும் பெண்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் ஊக்குவிப்புகளைப் பெறுவதற்காக இன்று (20) காலை இராணுவத் தலைமையகத்தில் தளபதியின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டனர்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் நாட்டுக்கும் இராணுவத்தினருக்கும் புகழைக் கொண்டு வந்த விளையாட்டு வீரர்களை சந்தித்து அவர்களின் சாதனைகளைப் பாராட்டியதுடன், இராணுவ விளையாட்டுப் பணிப்பாளர் முன்னிலையில் ஒவ்வொருவருடனும் உரையாடினார்.

2022 ஆம் ஆண்டிற்கான ஆசியக் கிண்ண சம்பியன்ஷிப் - 2022 இல் வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியில் அங்கம் வகிக்கும் இராணுவத்தின் கிரிக்கெட் வீரரான சார்ஜன்ட் எம்.எம் தீக்க்ஷன ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் - 2022 இல் இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியில் அங்கம் வகிக்கும் கோப்ரல் டி.டி அல்கம, கோப்ரல் கே.பி.வை டி சில்வா மற்றும் கோப்ரல் எம்.ஏ.ஐ.ஜே பெரேரா ஆகியோரும் ஆசிய உடற்கட்டமைப்பு சாம்பியன்ஷிப் - 2022 போட்டியிட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற கோப்ரல் ஆர்.ஏ.டி.பி. ராஜபக்ஷ அவர்களும் சர்வதேச சாதனையாளர்களில் அடங்குவர்.

அதே நேரத்தில், இராணுவத் தளபதி அவர்களின் சாதனைகளை அங்கீகரிப்பதற்காக, மேற்கூறிய சாதனையாளர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களின் நிலையை உயர்த்துமாறு அறிவுறுத்தினார்.

இதன்படி, சிப்பாய் எம்.எம்.தீக்க்ஷன அவர்களுக்கு சார்ஜன்ட் நிலையும், சிப்பாய் டி.டி.அல்கம, சிப்பாய் கே.பி.வை டி சில்வா, சிப்பாய் எம்.ஏ.ஐ.ஜே. பெரேரா ஆகியோர் கோப்ரல் நிலைக்கும் உயர்த்தப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி, அவர்களின் சர்வதேச சாதனைகளைப் பாராட்டி, சார்ஜன்ட் எம்.எம்.தீக்க்ஷன, வலைப்பந்து அணி உறுப்பினர்கள் மற்றும் உடற்கட்டமைப்பாளர் லான்ஸ் கோப்ரல் ஆர்.ஏ.டி.பி. ராஜபக்ஷ ஆகியோருக்கு ஊக்கதொகையையும் வழங்கினார்.

இந் நிகழ்வில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு, நிதி முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யுபிஎஸ்எம் அபேசேகர ஆர்எஸ்பீ யுஎஸ்பீ மற்றும் இராணுவ விளையாட்டுப் பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் கேஏடபிள்யுஎன்எச் பண்டாரநாயக்க யுஎஸ்பீ ஆகியோரும் கலந்து கொண்டனர்.