Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th September 2022 18:29:53 Hours

நூலகங்கள் மற்றும் புத்தகப் பாதுகாப்பு குறித்த நிபுணரின் இராணுவத்திற்கான ஆதரவு

நூலகப் பயிற்சி மற்றும் புத்தகப் பாதுகாப்புத் துறையில் அனுபவம் வாய்ந்த நிபுணரான திரு. கலன சந்திமால் வீரதுங்க வாகிஸ்த அவர்கள் இன்று காலை (16) இராணுவத் தலைமையகத்திற்கு வருகைதந்து, இராணுவ தலைமையகத்தின் நூலகத்தின் நலனுக்காக 18 பெளத்த தத்துவ நூல்கள் தொகுதியினை (508 புத்தகங்கள்) வழங்கினார்.

இராணுவ தளபதி அலுவலகத்தில் வைத்து இந்த புத்தகங்களை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு முதல், நன்கொடையாளர், திரு. கலன சந்திமால் வீரதுங்க வாகிஸ்த நாடு முழுவதும் உள்ள 100 க்கும் மேற்பட்ட இராணுவ நூலகங்களுக்கு பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களை பரிசாக வழங்கியுள்ளதுடன் இவர் நாட்டின் அபிவிருத்திக்கான இராணுவ பாத்திரங்களையும் பணிகளையும் பரிதும் போற்றுபவர்.

தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி நூலகங்கள், இலங்கை சிங்கப் படையணியின் சுற்றுச்சூழல் நூலகம், இயந்திரவியல் காலாட் படையணியின் நூலகம் மற்றும் மதுருஓயா விஷேட படையணி பயிற்சிப் பாடசாலை நூலகம் ஆகியவற்றை நிறுவுவதற்கும் அவர் உறுதுணையாக இருந்துள்ளார்.

சுமுகமான கலந்துரையாடலின் போது, இராணுவத் தளபதி மற்றும் திரு.கலன சந்திமால் வீரதுங்க வாகிஸ்த ஆகியோர் நூலகத் துறை மற்றும் புத்தகங்களைப் பாதுகாத்தல் தொடர்பான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

சுமூகமான சந்திப்பின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், திரு கலன சந்திமால் வீரதுங்க வாகிஸ்த அவர்களுக்கு நினைவுச் சின்னத்தை வழங்கி இலங்கை இராணுவத்தின் நல்லெண்ணத்தை அடையாளப்படுத்தினார்.

பயிற்சிப் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் டி.கே.எஸ்.கே தொலகே யூஎஸ்பி பிஎஸ்சீ அவர்களும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டார்.