Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th September 2022 19:46:34 Hours

முதலாவது இராணுவ மகளிர் குழுவினர் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு தயார் நிலையில்

சர்வதேச பாராட்டு பெற்ற மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பாடநெறியினை வெற்றிகரமாக நிறைவுசெய்த பயிற்சிபெற்ற 54 இராணுவ மகளிர் சிப்பாய்களின் முதல் குழுவினருக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 2022 செப்டம்பர் 08 ஆம் திகதி ஶ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வின் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் கலந்துகொண்டு அவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்த்துடன் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்த பயிற்சி பாடநெறியில் 3 மகளிர் அதிகாரிகள் மற்றும் 51 மகளிர் சிப்பாய்கள் கலந்துகொண்டு பாடநெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதுடன் இராணுவத் தளபதி இந்த நிபுணத்துவத் துறையில் அவர்களின் விதிவிலக்கான திறன்கள் நாட்டிற்கு நன்மை பயக்கும் என்று குறிப்பிட்டதுடன், தலைமைக் களப் பொறியாளர் அலுவலகத்தால் வடிவமைக்கப்பட்ட அந்த மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் படிப்புகளை முடிப்பதற்கான அவர்களின் நீடித்த தைரியத்திற்காக அவர்களை வாழ்த்தி பாராட்டினார்.

இராணுவ மகளிர் சிப்பாய்களுக்கான முதலாவது பாடநெறி 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி பூஓயாவில் அமைந்துள்ள பொறியியலாளர்கள் பிரிகேட் தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் இந்த பாடநெறியானது ஆறு மாதங்களுக்கும் மேலாக நடாத்தப்பட்டது.இதன் இரண்டாவது கட்டமானது யாழ். மயிலடியில் அமைந்துள்ள 10 வது கள பொறியியலாளர்கள் தலைமையகத்தில் 202 ஜூன் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த பாடநெறி தலைமைக் களப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் எம்.கே. ஜயவர்தன ஆர்எஸ்பி யூஎஸ்பி என்டியு அவர்களின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றது.

இந் நிகழ்விடத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதி யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் WMGCSB விஜயசுந்தர ஆர்எஸ்பி யுஎஸ்பி என்டியு மற்றும் தலைமை களப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் எம்.கே.ஜயவர்தன ஆர்எஸ்பி யுஎஸ்பி ஆகியோரால் வரவேற்கப்பட்டதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றும் நிகழ்வு இடம் பெற்றது. அதன் பின்னர் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணி, பயிற்சி அமர்வுகள், மீட்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் திட்டங்கள் போன்றவற்றின் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் ஒரு சிறிய வீடியோ காட்சி திரையிடப்பட்டது.

இந்த இரண்டு குழுக்களில் முதலாவது இராணுவ மகளிர் குழுவினர் இந்த அனுபவத்தின் மூலம் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணியின் ஐக்கிய நாடுகள் கண்ணிவெடி அகற்றும் பிரிவில் சேவையாற்ற சந்தர்பத்தை பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வின் போது கண்ணிவெடி அகற்றும் பெண் வீராங்கனைளுக்கு இராணுவத் தளபதி முதல் சான்றிதழ்களை வழங்கினார்.

அதற்கமைய சான்றிதல் வழங்கும் நிகழ்வில் பொது பணி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்யுஎம்என் மானகே WWV RWP RSP psc மற்றும் யாழ் பாதுகாப்புப் படைத் தளபதியும் இலங்கைப் பொறியியலாளர் படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் WMGCSB விஜயசுந்தர RSP USP ndu ஆகியோர் இணைந்தனர். நிகழ்வின் முடிவில் கண்ணிவெடி அகற்றும் பெண் வீராங்கனை ஒருவரால் நன்றியுரை தெரிவிக்கப்பட்டது.