Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th September 2022 12:49:50 Hours

இலங்கை தேசிய பாதுகாப்பு கல்லூரியின் முதல் இளங்கலை பட்டதாரிகளுக்கு தளபதியினால் விருந்துபசாரம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் தலைமையில் உலகளாவிய தேசிய பாதுகாப்புக் கல்லூரிகளுடன் தொடர்புடைய அண்மையில் நிறுவப்பட்ட தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் 31 முப்படை மற்றும் பொலிஸ் மாணவ அதிகாரிகளுக்கு இராணுவ சம்பிரதாய மரபுகளின் ஒரு பகுதியாக, விருந்துபசார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு இராணுவத் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (6) முறையான வரவேற்புடன் இடம்பெற்றது.

நாட்டின் பாதுகாப்புக் கண்ணோட்டங்கள் மற்றும் சர்வதேச தரம் பற்றிய ஆய்வுகள் பற்றிய முதன்மைக் கல்வி இடமான இலங்கை தேசிய பாதுகாப்பு கல்லூரியின் மாணவர் அதிகாரிகள் சார்பாக நடத்தப்பட்ட தளபதியின் முறையான வரவேற்பு, உலகின் பழைய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் மரபுகளுக்கு ஏற்ப புதிய தேசிய பாதுகாப்பு கல்லூரியில் முதல் முறையான வரலாற்றைக் குறிக்கிறது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே மற்றும் இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர் இராணுவத் தலைமையகத்திற்கு வருகை தந்த தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தளபதி ஜெனரல் அமல் கருணாசேகர (ஓய்வு) மற்றும் அவரது துணைவியார் திருமதி தனஞ்சனி கருணாசேகர மற்றும் தூதுக்குழுவினரை அன்புடன் வரவேற்றனர்.

இந்நிகழ்வில் இராணுவத் தளபதி, அவரது துணைவியார், பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி, தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தளபதி, பணிப்பாளர் உறுப்பினர்கள் மற்றும் மாணவர் அதிகாரிகள் இணைந்து குழு புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். பின்னர் லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே மாணவர் அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர் உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.

இராணுவத் தளபதி அவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியின் முடிவில் ஒவ்வொரு தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பட்டதாரிகளுக்கும் ஒரு அடையாள நினைவுப் பரிசை வழங்கியதுடன் எதிர்காலத்தில் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் முன்னோக்கிய நகர்விற்கு அவர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.