Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th September 2022 21:59:03 Hours

பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோ எம்டி ஷாபியுல் பாரி அவர்கள் செவ்வாய்க்கிழமை (6) இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இச் சந்திப்பில் லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் பரஸ்பர பொதுவான விடயங்களை கலந்துரையாடியதுடன் வருகை தந்த பாதுகாப்பு ஆலோசகருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். மேலும் இருவரும் இரு நாடுகளிலும் உள்ள படையினரின் நலனுக்காக இருதரப்பு பயிற்சி தொகுதிகளை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இரு நாட்டு ஆயுத படைகளின் நலனுக்காக அனுபவம் மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பரிமாறிக் கொள்வது தொடர்பாக கலந்துரையாடினர். நீண்ட நேர சந்திப்பின் முடிவில் இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இங்கே கொமடோ எம்டி ஷாபியுல் பாரி அவர்களின் சுருக்கமான சுயவிவரம்:

கொமடோ எம்டி ஷாபியுல் பாரி (ND), psc, BN 1990 ஜனவரி மாதம் பங்களாதேஷ் கடற்படையில் சேர்ந்தார் மற்றும் 1992 ஜூலை 01 ஆம் திகதி நிர்வாக (செயல்பாட்டு) கிளையில் பங்களாதேஷ் கடற்படை எகடமியில் இருந்து Ag S Lt ஆக நியமிக்கப்பட்டார்.அவரது நீண்ட சேவைக்காலத்தில், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பல்வேறு தொழில்முறை நிறுவனங்களில் ஜூனியர், நடுத்தர மற்றும் உயர்நிலை படிப்புகளை மேற்கொள்வதற்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். லெப்டினன்னாக, அவர் தனது நீண்ட ND வழிசெலுத்தல் மற்றும் வழிக்காட்டல் (Navigation and Direction) சிறப்புப் பாடநெறியினை பாகிஸ்தானின் கராச்சியில் சிறப்பு பெறுபேற்றுடன் நிறைவு செய்துள்ளார்.அவர் 2006 இல் பங்களாதேஷில் மைபூரில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியில் (DSCSC) பதவி நிலை பாடநெறியினை நிறைவுசெய்துள்ளதுடன் 2008 இல் லெப்டினன் கொமாண்டராக TN, வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியில் (DSSC) இரண்டாவது பதவி நிலை கல்லூரியை முடித்தார். பின்னர் அவர் இல் மைபூரில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியில் 2012-13 இல் செயல்பாட்டு பதவிநிலை அதிகாரியாகவும் 2016-17 இல் தலைமை பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றினார். அவர் சிவில் சேவைகளின் இணைச் செயலாளருடன் இணைந்து 2015 இல் சிரேஷ்ட பதவி நிலை பாடநெறியினை (74 SSC) சாவார் பொது நிர்வாக பயிற்சி பாடநெறியில் முடித்தார்.அவர் இந்தியாவின் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளில் முதுமாணி பட்டத்தை பெற்றதுடன் டாக்காவில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பாதுகாப்புப் பட்ட படிப்பைப் முடித்தார். கொமாடோ பாரி கடற்படையில் கட்டளை, பதவி நிலை மற்றும் அறிவுறுத்தல் உள்ளிட்ட நியமனங்கள் வகித்துள்ளார். மேலும் ரோந்து, ஏவுகணை படகுகள், கடல் ரோந்து கப்பல்கள் மற்றும் பங்களாதேஷ் கடற்படையின் வழிகாட்டும் ஏவுகணை போர் கப்பல்கள் போன்ற பல்வேறு வகையான போர்க்கப்பல்களுக்கு அவர் கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார் என்பது குறிப்பிடதக்தாகும்.