Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th August 2022 21:02:16 Hours

ஓய்வுபெற்ற முப்படை வீரர்களினால் ‘சிலோனில் இருந்து தொண்டர்கள் டபிள்யூ டபிள்யூ 1 மற்றும் 2 புத்தகத்தின் பிரதி இராணுவத் தளபதிக்கு

ஓய்வுபெற்ற சிரேஷ்ட படைவீரர்கள் மூவர் அடங்கிய குழு இன்று (19) பிற்பகல் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்துப் பேசியதுடன், அவர்கள் இணைந்து எழுதிய " சிலோனில் இருந்து தொண்டர்கள் டபிள்யூ டபிள்யூ எஸ் 1 மற்றும் 2’ என்ற நூலின் பிரதியொன்றை வழங்கி வைத்தனர்.

முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது இலங்கை இராணுவ வீரர்களின் பல்வேறு பணிகள் மற்றும் நாடு எப்படி வெளிநாட்டுப் படைகளிடம் இருந்து பாராட்டைப் பெற்றது என்பது பற்றிய விரிவான விவரத்தை இந்தப் புத்தகம் கொண்டுள்ளது. இராணுவத்தின் பிரிகேடியர் (ஓய்வு) ஹிரன் ஹலங்கொட, விமானப்படையின் குரூப் கெப்டன் (ஓய்வு) குமார் கிரிந்தே மற்றும் கடற்படையின் பிரதம சிறு அதிகாரி (ஓய்வு) குயின்டஸ் அன்ட்ரைட் ஆகிய மூவரும் இந்த சுமூக சந்திப்பின் போது, எதற்காக இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டது என தளபதியிடம் விளக்கமளித்ததுடன் இதை எதிர்காலத்தில் ஒரு குறிப்பு ஆவணமாக மாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

அதே சந்தர்ப்பத்தில் இராணுவத்தின் கெமுனு ஹேவா படையணியின் புகழ்பெற்ற படைவீரரான பிரிகேடியர் (ஓய்வு) ஹிரான் ஹலங்கொட அவர்கள், நாடு முழுவதும் உள்ள இராணுவ மருத்துவமனைகளில் நோயாளிகளின் நலனுக்காக தன்னால் ஒருங்கிணைக்கப்பட்ட 114 தீவிர சிகிச்சை பிரிவுக்கு படுக்கை மெத்தைகளை வழங்க ஏற்பாடு செய்யுமாறு இராணுவத் தளபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

சுமூகமான சந்திப்பின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, அவர்களின் முயற்சியைப் பாராட்டி, சிரேஷ்ட படைவீரர் குழுவிற்கு நினைவுச் சின்னத்தை வழங்கி இலங்கை இராணுவத்தின் நல்லெண்ணத்தை அடையாளப்படுத்தினார்.