Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th August 2022 17:47:32 Hours

மேஜர் ஜெனரல் சமந்த விக்கிரமசேனவிக்கு இராணுவத் தளபதியின் பாராட்டு

இராணுவத்தில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னுதாரணமாக பணியாற்றி ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரியான மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது படைப் பிரிவின் முன்னாள் தளபதியும் இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் மேஜர் ஜெனரல் சமந்த விக்கிரமசேன அவர்களுக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் திங்கட்கிழமை (8) தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் தனது அலுவலகத்தில் வைத்து ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி காலாட்படை வீரராக குறிப்பிடத்தக்க சிறந்த பங்களிப்பை இராணுவத்திற்கு வழங்கியதற்காக அவரைப் பாராட்டியதுடன் கடந்த காலங்களில் பல்வேறு திறன்களில் அர்ப்பணிப்புடன் ஆற்றிய சேவைகளையும் மிகவும் பாராட்டினார். மேலும் அவருடனான கலந்துரையாடலின் போது "நிறுவனத்தின் மீதான உங்கள் விசுவாசம் மற்றும் ஒருமைப்பாட்டின் உயர் மட்டத்தை நான் மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டியதில்லை", என்று அவர் கூறினார். மே 2009 க்கு முன்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் உச்சக்கட்டத்தின் போது ஒரு உண்மையான காலாட்படை வீரராக ஓய்வு பெற்றவரின் விலைமதிப்பற்ற தியாகங்கள் மற்றும் அச்சமற்ற பாத்திரங்கள் மற்றும் போரின் வெற்றிக் கதையில் அவரது மறக்க முடியாத பங்களிப்பை அதன்போது நினைவுபடுத்தினார்.

இந்த சுமூக சந்திப்பின் போது, இராணுவத் தளபதி வெளியேறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் முயற்சிகள் குறித்தும் கேட்டறிந்தார். கலந்துரையாடலின் போது இராணுவத் தளபதி ஓய்வு பெற்றவரின் குடும்ப உறுப்பினர்களான உயர் நீதிமன்ற சட்டத்தரணி திருமதி லங்கா பிரதீபிகா, ஜோர்ஜியாவில் மருத்துவ பீட மாணவியான திருமதி வெனுரி விக்கிரமசேன மற்றும் விசாகா வித்தியாலய மாணவியான திருமதி லக்தினி விக்கிரமனா ஆகியோருடன் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.குறிப்பாக போரிலும் மற்றும் பிற இடங்களிலும் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் வெளியேறும் சிரேஷ்ட அதிகாரிக்கு அவர்கள் வழங்கிய உத்வேகத்திற்கும் தைரியத்திற்கும் லெப்டினன் ஜெனரல் லியனகே அவர்கள் அக்குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.இலங்கை இலேசாயுத காலாட்படை தனது பதவிக் காலத்தில் 14 வது படைப் பிரிவின் தளபதி அலுவலகத்திற்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் பல முக்கிய கட்டளை மற்றும் பதவி நிலை வகித்துள்ளார்.

பதவி விலகும் சிரேஷ்ட அதிகாரியும் இராணுவத் தளபதியின் விருப்பத்திற்கும் வழிகாட்டலுக்கும் நன்றி தெரிவித்ததுடன், இராணுவத் தளபதியிடமிருந்து தனது கடமைகளை நிறைவேற்றுவதில் தனக்குக் கிடைத்த ஊக்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்.

கலந்துரையாடலின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் மேஜர் ஜெனரல் சமந்த விக்கிரமசேனவுக்கு பாராட்டுச் சின்னமாக சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கினார். இதே நிகழ்வில் குடும்பத்தினருக்கு சிறப்பு பரிசையும் வழங்கினார்.

மேஜர் ஜெனரல் சமந்த விக்கிரமசேன 1988 ஒக்டோபர் 06 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் கெடட் அதிகாரியாக இரத்மலானை ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல போர் கல்லுரியில் இணைந்தார் மற்றும் வெற்றிகரமான பயிற்சியின் பின்னர் 05 ஜனவரி 1991 இல் இலங்கை இலேசாயுத காலாட்படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் பணிபுரிந்த காலப்பகுதியில் தொடர்ந்து அடுத்தடுத்த பதவிகளுக்கு தரம் உயர்த்தப்பட்ட பின்னர், அவர் 04 பெப்ரவரி 2022 அன்று மேஜர் ஜெனரல் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டார்.

இந்த சிரேஷ்ட அதிகாரிக்கு அவரது அர்ப்பணிப்பு சேவையைப் பாராட்டி ரண விக்கிரம பதக்கம் (மூன்று முறை வழங்கப்பட்டது), ரண சூர பதக்கம் (இரண்டு முறை வழங்கப்பட்டது), உத்தம சேவா பதக்கம், தேசபுத்திர பதக்கம், கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், பூர்ண பூமி பதக்கம், வடக்கு மற்றும் கிழக்கு செயற்பாட்டு பதக்கம், ரிவிரேச பிரச்சார சேவை பதக்கம், 50 வது சுதந்திர ஆண்டு நினைவு பதக்கம், இலங்கை இராணுவத்தின் 50 வது ஆண்டு நினைவு பதக்கம், இலங்கை ஆயுத சேவைகள் நீண்ட சேவை பதக்கம், சேவாபிமானி பதக்கமா, சேவா பதக்கமா மற்றும் விதேச சேவா பதக்கம போன்ற பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.