Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd August 2022 18:00:32 Hours

இந்தோனேசியாவின் மல்டிநெஷனல் பயிற்சியில் இராணுவத்தினர் பங்கேற்பு

ஐந்து அதிகாரிகள் மற்றும் பதினான்கு அதிகாரவனையற்ற அதிகாரிகள் இந்தோனேசிய ஆயுதப் படைகளின் அழைப்பின் பேரில் 18-31 ஜூலை 2022 இந்தோனேசியாவின் போகோரில் இந்தோனேசிய ஆயுதப்படைகளின் அமைதி காக்கும் பயிற்சி மையத்தினால் நடாத்தப்பட்ட 'கருடா காண்டி தர்மா 11' மல்டிநெஷனல் பயிற்சியில் பங்கேற்றனர். இது உலகின் மிகப்பெரிய அமைதி காக்கும் நடவடிக்கை பயிற்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்தோனேசிய தேசிய ஆயுதப் படைகள் மற்றும் US Indo-Pacific Command (USINDOPACOM) இணைந்து இணை அனுசரணை வழங்கிய இந்தப் மல்டிநெஷனல் பயிற்சியில் இருபத்தி இரண்டு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து கண்டங்களைச் சேர்ந்த ஏராளமான இராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியானது பணிநிலை பயிற்சி நிகழ்வு, களப் பயிற்சி நிகழ்வு மற்றும் UN பாலினம் மற்றும் பாதுகாப்பு திட்டமிடல் பாடத்திட்டத்தை உள்ளடக்கியது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்களின் ஆசிர்வாதத்துடன் கேணல் ருவன் எஹெலெபொல சர்வதேச இராணுவ பயிற்றுவிப்பாளராக பணியாற்றினார், அமைதி காக்கும் பயிற்சி மையத்தில் நடைபெற்ற பயிற்சியில் 2 அதிகாரிகள் மற்றும் 14 சிப்பாய்கள் FTE பயிற்சியில் கலந்து கொண்டதுடன் ஒவ்வொரு அதிகாரியும் STE மற்றும் UN பாலினம் மற்றும் பாதுகாப்பு திட்டமிடல் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

இலங்கைக் குழுவின் நிபுணத்துவம், அர்ப்பணிப்பு மற்றும் நடத்தை ஏற்பாட்டாளர்களால் பாராட்டப்பட்டதுடன், பங்கேற்பாளர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் கோட்பாட்டிற்கு இணங்க பொதுவான தந்திரோபாயங்கள், நுட்பங்கள் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றில் செயல்திறன் மற்றும் பணிகள் பற்றிய அவர்களின் அறிவையும் நிபுணத்துவத்தையும் மேம்படுத்த ஒரு பொன்னான வாய்ப்பு வழங்கப்பட்டது.