Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th July 2022 10:12:08 Hours

இராணுவ தொண்டர் படையணித் தலைமையகத்தின் புதிய நிர்வாக கட்டிடம் திறப்பு

கொஸ்கம சாலவையில் அமைந்துள்ள இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையக வளாகத்தில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பு தலைமையக வளாகம் தீக்கிரையானதனை தொடர்ந்து இப் பிரதான நிர்வாக கட்டிடம் நிரமாணி்க்கப்பட்டு இன்று (23) காலை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்துவைக்கப்பட்டது. இதன்போது வருகை தந்த பிரதம அதிதிக்கு சிவப்பு கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.

அண்மையில் திறக்கப்பட்ட புதிய பிரதான வாயிலுக்கு வருகை தந்த இராணுவத் தளபதிக்கு இலங்கை இராணுவத் தொண்டர் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத்யாபா அவர்கள் வரவேற்பு அளித்ததுடன் அங்கு இராணுவ மரபுகளுக்கு இணங்க காவலர் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை அன்றைய பிரதம அதிதிக்கு வழங்கப்பட்டது.

இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் அனிவகுப்பு மரியாதைக்கு கௌரவம் செலுத்தினார்.

பதாகையைத் திரைநீக்கம் செய்து, ‘செத்பிரித்’ பாராயணம், ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் அன்றைய பிரதம அதிதி சுப நேரத்தில், நாடா வெட்டி, புதிய அலுவலக வளாகத்தை திறந்து வைத்தார். அங்கு கூடியிருந்த பௌத்த பிக்குகளின் ஆசீர்வாதங்களைப் பெற்ற பின்னர் அவர்களுடன் சில கருத்துக்களையும் இராணுவ தளபதி பகிர்ந்து கொண்டார்.

அன்றைய பிரதம விருந்தினரான இராணுவ தளபதி இலங்கை இராணுவத் தொண்டர் படையணித் தலைமையக தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் முழுத் திட்டத்திலும் ஆர்வமுடன், நேர்த்தியான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நவீன கட்டிடத் தொகுதியில் உள்ள அனைத்துப் பிரிவுகளையும் பார்வையிட்டு, கட்டுமானபணிகள் கவர்ச்சியாகவும் பயனுள்ளதாகவும் நிறைவடைந்துள்ளது என்பதை நேரில் பார்வையிட்டு இலங்கை இராணுவத் தொண்டர் படையணித் தலைமையக தளபதி மற்றும் திட்டத்திக்கு உதவிய அனைத்து படையினரையும் பராட்டினார்.

புதிய இலங்கை இராணுவத் தொண்டர் படையணித் தலைமையக நிர்வாக வளாகத்தை மீண்டும் நிறுவுதல் மற்றும் அருகிலுள்ள இராணுவ வழங்கல் தலைமையக வளாகத்தில் இருந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு அதன் மறுமலர்ச்சி, 'இராணுவ முன்னோக்கிய மூலோபாய வியூகம்-2020/2025' உடன் ஒத்துப்போவதுடன் இதற்காக இராணுவத்திற்கு சுமார் 75 மில்லியன் செலவாகும். இலங்கைப் பொறியியலாளர் படையினர், பொறியியலாளர் சேவை படையினர் மற்றும் ஏனைய அனைத்துத் துணைப் படையணிகளின் உயர் கட்டடக்கலை வடிவமைப்பில் நன்கு பொருத்தப்பட்ட புதிய மாடிக் கட்டிடத்தை நிர்மாணித்து, சிவில் ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்களுடன் நெருக்கமான ஆலோசனையுடன் அதனை நிறைவு செய்தனர்.

இறுதி நிகழ்விற்கு வருகை தந்த இராணுவத் தளபதி தனது வருகையின் நினைவுகளை பகிர்ந்து செல்ல அழைக்கப்பட்டதுடன், அவர் புறப்படுவதற்கு முன்னர் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டியதுடன் தனது எண்ணங்களையும் பாராட்டுக்களையும் இலங்கை இராணுவத் தொண்டர் படையணித் தலைமையக விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் பதிவிட்டார்.

இராணுவ பதவிநிலை பிரதானி உட்பட இராணுவ பிரதி பதவிநிலை பிரதானி, இராணுவ பொதுப்பணி பணிப்பாளர் நாயகம், நிறைவேற்றுப் பணிப்பாளர் நாயகம், இராணுவ யுத்த உபகரணங்கள் பணிப்பாளர் நாயகம், இராணுவ காலாட்படை பணிப்பாளர் நாயகம், மேற்கு இராணுவ பாதுகாப்பு படை தலைமையக தளபதி, இராணுவ வழங்கல் பிரிவு தளபதி, அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவத் தொண்டர் படைத் தலைமையக படையினரும் இத் திறப்பு விழாவில் பங்குபற்றினர்.

இலங்கை இராணுவத் தொண்டர் படையானது தொடர்ச்சியான சேவையில் உள்ளதுடன், வயது மற்றும் தகைமைகளின் அடிப்படையில் குறுகிய சேவை காலங்கள் மற்றும் குறைக்கப்பட்ட ஆட்சேர்ப்புக் கட்டுப்பாடுகள் மூலம் நிரந்தர இராணுவ படையினை உயர்த்துவதற்கான துணைப் படையாகச் செயற்பட்டுள்ளது.