Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th July 2022 17:49:06 Hours

அமெரிக்க தூதரகத்தின் புதிய பாதுகாப்பு இணைப்பாளர் இராணுவ தளபதியை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்

அமெரிக்க இராணுவத்தின் லெப்டினன் கேணல் அந்தோனி சி. நெல்சன், அண்மையில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளராக நியமிக்கப்பட்ட நிலையில் இன்று (27) காலை இராணுவ தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை உத்தியோகபூர்வமாக சத்தித்தார்.

இடம்பெற்ற சந்திப்பின் போது, லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் புதிய பாதுகாப்பு இணைப்பாளருடன் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதோடு, அங்கு இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு இடையே நிலவும் நல்லெண்ணம், ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வின் பிணைப்புகளை இருவரும் நினைவு கூர்ந்தனர்.

இலங்கை இராணுவத்தினருக்கான பயிற்சித் திட்டங்களை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் பல்வேறு பரிமாற்ற திட்டங்கள் மற்றும் பிற பொதுவான விடயங்கள் குறித்தும் அங்கு இடம்பெற்ற கலந்துயைாடலின் போது கூடிய கவனம் செலுத்தப்பட்டன.

சுமூகமான சந்திப்பின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், அமெரிக்க தூதரகத்தில் உள்ள புதிய பாதுகாப்பு இணைப்பாளர் மற்றும் உடன் வந்த அதிகாரிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கி வைத்தார்.

அமெரிக்கத் தூதரகத்தின் உதவி பாதுகாப்பு இணைப்பாளர் திரு செத் நெவின்ஸ் மற்றும் ஏனைய பிரதிநிதி ஆகியோர் இராணுவச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஸ்வர்ண போதோட்ட அவர்களும் இணைந்து அன்றைய சந்திப்பில் கலந்துகொண்டனர்.