Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st July 2022 14:10:35 Hours

இராணுவ தலைமையகத்தில் அதிகாரிகளுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் திறந்துவைப்பு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடத்தை இன்று (30) காலை எளிமையான நிகழ்வின் போது திறந்து வைத்தார்.

பயிற்சி பெஞ்சுகள், டம்பெல் செட்கள், டிரெட்மில்ஸ், பார்பெல் செட்கள், எலிப்டிகல்ஸ், ரோயிங் இயந்திரகள், பலன்ஸ் ட்ரெய்னர்கள் போன்றவற்றுடன் முழுமையான இயந்திரஙகள் பொருத்தப்பட்ட புதிய உடற்பயிற்சி கூடமானது, இராணுவ வாழ்க்கைக்கு கட்டாயத் தேவை என்பதால் அதிகாரிகள் தங்கள் சிறந்த உடலமைப்பையும் எல்லா நேரத்திலும் பராமரிக்க உதவும் வகையில் நவீன தரங்களுடன் பொருந்தக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரிகேடியர் நளின் பண்டாரநாயக்கவின் வேண்டுகோளுக்கு இணங்க, , அன்றைய பிரதம விருந்தினர் புதிய உடற்பயிற்சி இயந்திரத்தை இயக்கி நிலையத்தை பாவனையாளர்காக திறந்து வைத்தார். அந்த இடத்தில் இருக்கும் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர்கள், இந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் பயன்பாட்டை பிரதம அதிதிக்கும் படையினருக்கும் விளக்கினர்.

இராணுவத் தளபதியை விளையாட்டுப் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் நளின் பண்டாரநாயக்க மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து வரவேற்றனர்.

பிரதி பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.