Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th May 2022 10:01:25 Hours

தேசத்தின் 13 வது போர் வீரர்களின் நினைவு தின நிகழ்வு

தாய்நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த போர்வீரர்களை நினைவு கூறும் வகையில் இன்று (19) முற்பகல் ஸ்ரீ ஜயவர்தனபுர போர்வீரர் நினைவுத்தூபியில் (ரணவிரு ஸ்மாரகய) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின் போது போர் வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதன் போது பிரதம அதிதியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொண்டதுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜகத்அல்விஸ், பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா , கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன , விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன, பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே (ஓய்வு), ரணவிரு சேவை அதிகார சபையின் தலைவர் நந்தன சேனாரத்ன (ஓய்வு) மற்றும் முப்படை அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில், 2009 மே மாதத்திற்கு முன்னர் எல்ரீரீ பயங்கரவாத தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்கள் (23,962), கடற்படை வீரர்கள் (1160), விமானப்படை வீரர்கள் (443), 2598 பொலிஸ் மற்றும் 456 சிவில் பாதுகாப்பு திணைக்கள வீரர்கள் என மொத்தம் 28,619 பேரின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் விலைமதிப்பற்ற தியாகங்கள் ஆகியவற்றிற்காக அவர்கள் கௌரவிக்கப்பட்டனர். அதிகாலையில் நடைபெற்ற இந்த விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துதல், வீரம் மற்றும் விழிப்புணர்விற்கான வாசிப்பு ஆகிய நிகழ்வுகளும் இடம்பெற்றன.

அன்றைய நிகழ்வின் போது அன்றைய பிரதம அதிதியான அதிமேதகு ஜனாதிபதியவர்கள் முதலில் நினைவுத்தூபியில் மலர் மாலை அணிவித்து வைத்ததுடன் இதன்போது பாதுகாப்புச் செயலாளர், பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் , பல குடும்ப உறுப்பினர்கள், உயிர்நீத்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஏனைய பலரும் பிரசன்னமாகியிருந்ததுடன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் நினைவுச்சின்னத்திற்கு அவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

இவ்வருடத்திற்கான 13வது தேசிய போர்வீரர் தின நினைவு கூறும் நிகழ்வானது பிரதம அதிதியின் வருகையை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக ஆரம்பமானதுடன் இது இராணுவ விழாக்களில் பொதுவான அம்சமாகும். இந்த நிகழ்வானது பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்பில் ரணவிரு சேவை அதிகாரசபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி எல்ரீரீ பயங்கரவாதிகளின் கொடூரச் செயல்கள் முடிவுக்கு வந்து இன்று 13 வருடங்கள் ஆகின்றன. முதல் பயங்கரவாதத் தலைவர் பிரபாகரன் தலைமையிலான கொடூரமான பயங்கரவாதம் இலங்கையில் இருந்து அழிக்கப்பட்ட செய்தியினை இலங்கை மக்கள் அனைவரும் ஊடகங்களில் கேட்டறிந்தனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த கொடூரப் போரில் கொல்லப்பட்டு அந்த கொடூர பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான பொதுமக்களின் அன்புக்குரியவர்களுக்கு இது ஒரு சோகமான நினைவாக இருந்தாலும், பெருமைமிக்க இலங்கையின் வீரமிக்க போர்வீரர்கள் எதிர்கால சந்ததியை உருவாக்கி அந்த கசப்பான அனுபவங்களை அவர்களுக்கு விட்டு வைக்காமல் சுதந்திரமான நாடும் அதற்காக தங்கள் உயிரை தியாகம் செய்து இந்த மண்ணை ஒன்றிணைத்தார்கள்.