Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th May 2022 12:02:39 Hours

வெசக் போயா தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வாழ்த்துச் செய்தி

புத்த பெருமானின் போதனைகளை கடைப்பிடிக்கும் அதேவேளை நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற அனைவரும் உறுதிபூண வேண்டுமென பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் மூன்று முறைகள் ஆசிர்வாதம் பெற்று பரிநிர்வாணம் அடைந்த தினமான வெசாக் தினத்தை முன்னிட்டு இராணுவத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வாழ்த்துச் செய்தியின் முழு வடிவம் கீழ்வருமாறு,

புத்தபெருமானின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணத்தை நினைவுகூரும் இந்த வெசாக் பௌர்ணமி தினத்தில், இலங்கை இராணுவத்தின் தளபதியாக அதிகாரிகள், சிப்பாய்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது இனிய வெசாக் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஞானம் பெற்றவரின் போதனைகளால் அமைதி, மகிழ்ச்சி மற்றும் ஆன்மீக மேம்பாடுகளை அடைவதற்காகவும் வாழ்த்துகிறேன்.

பழங்காலத்திலிருந்தே இலங்கையில் உள்ள பௌத்தர்கள், உலகெங்கிலும் உள்ள சக பௌத்த சகோதரர்களுடன் ஒன்றுபட்டு வெசாக் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்; இத்தினத்தின் 'ஆமிச பூஜை' (தான, தர்மம் செய்தல்) மற்றும் 'பிரதிபத்தி பூஜை' போன்றவற்றில் தம்மை ஈடுப்படுத்திக்கொள்வதோடு, மத அனுட்டானங்களை வெகுவாக கடைப்பிடித்து பண்டிகைளை கொண்டாடுவர். கடந்த இரு வருடங்களாக கொவிட் – 19 ஒழுங்குவிதிகளுக்கு இணங்கவே வெசக் பண்டிகையை கொண்டாட வேண்டிய நிலைமை காணப்பட்டது. ஆனால் இந்த ஆண்டில் மனித இனம் முழுவதையும் ஆட்கொண்டிருந்த தொற்றுநோய் அச்சுறுத்தல் குறைந்துள்ளமையால் நாட்டிலுள்ள அனைவரும் சுதந்திரமாக வெசாக் பண்டிகையை கொண்டாட முடியும்.

அனைத்து உயிரினங்களுக்கிடையில் அன்பு-கருணை, ஞானம், ஆன்மீகம், அமைதி மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றை உலகம் முழுவதிற்கும் எடுத்துரைக்கும் வெசாக் தினம் உலகில் உள்ள ஒவ்வொரு பௌத்தருக்கும் மகிழ்ச்சியளிக்கும் தினமாகும். தொற்றுநோய் பரவல் அச்சுறுத்லுக்கு மத்தியில் ஆட்பட்டு கிடந்த மக்கள் இரண்டு வருடங்களுக்கு பின்னர் சுதந்திரமாக வெசாக் பண்டிகையை கொண்டாடுகின்றனர். தாய்நாட்டின் பாதுகாப்பை முதன்மையாக கருதும் இராணுவம், பௌத்த போதனையின் மூலமும் அதன் கொள்கைகளைப் பின்பற்றும் அதேநேரம் நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்யகிறது. இந்த உண்மையை சமூகத்திலிருக்கும் அனைவரும் ஏற்றுக்கொள்வர். நாட்டிற்கான உங்களது அர்ப்பணிப்பு, நாட்டின் பாதுகாப்பு கடமைகளில் நீங்கள் வெற்றிபெற உதவும் என்று நான் நம்புகிறேன்.

வெசாக் என்பது பௌத்த போதனைகளின்படி மனித விழுமியங்ளை முதன்மையாக கொண்ட பண்டிகையாகும். இப்பண்டிகை மற்றைய இனம், மதத்தவர்களுடன் பிரிக்க முடியாத ஒற்றுமையை பேண வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. மத அனுட்டானங்கள் மற்றும் நற்பண்புகளை கடைப்பிடிக்க வேண்டியதும் அவசியமாகும். வெசாக் கூடுகள் மற்றும் அலங்காரங்கள், தானம் (இலவச உணவு வழங்கல்) போன்ற 'ஆமிச பூஜைகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம், மனித நற்பண்புகள் மற்றும் மதிப்புகள் நிறைந்த, சிறந்த எதிர்காலத்திற்கான புதிய அடித்தளத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளில் இந்த உயர்ந்த மத நிகழ்வு முக்கியமாக கவனம் செலுத்துகிறது என்று நான் நம்புகிறேன்.

இவ்வருடத்தின் அரச வெசாக் தின வலயமாக கூரகல புராதன விகாரை அறிவிக்கப்பட்டுள்ளது. கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட புராதன தொல்லியல் தளமான கூரகல வரலாற்று விகாரை இலங்கை இராணுவத்தின் அனுசரனையுடன் அண்மையில் புனரமைப்புச் செய்யப்பட்டது. எனவே இந்த பணிகளை நிறைவு செய்ய அளப்பரிய பங்களிப்பை வழங்கிய அனைத்துப் படைவீரர்களும் ஆசிர்வாதங்களுக்கு உரித்தானவர்கள்.

இந்த நேரத்தில் புத்த பெருமானின் போதனைகளை கடைப்பிடித்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற உறுதி ஏற்போம். இந்த வெசாக் பண்டிகை இலங்கை மக்களின் ஆரோக்கியம் மற்றும் ஆன்மிக மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசீர்வாதம் கிட்டட்டும்!

வெசாக் தின வாழ்த்துக்கள் !!!

ஷவேந்திர சில்வா டபிள்யூ டபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீசி பீஎஸ்சீ எம்பில்

ஜெனரல்

பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவ தளபதி