Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th May 2022 22:49:07 Hours

கெமுனு ஹேவா படையணி தலைமையக வீரர்களுக்கு 3 மாடி தங்குமிட கட்டிடம் பரிசளிப்பு

இரத்தினபுரி குருவிட்டவில் அமைந்துள்ள கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் சேவையாற்றும் கெமுனு படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான மூன்று மாடிகளை கொண்ட புதிய தங்குமிட வசதிகளை கொண்ட கட்டிடம் புதன்கிழமை (4) திறந்து வைக்கப்பட்டது.

படையணி தளபதியவர்களின் அழைப்பின் பேரில் கெமுனு ஹேவா படையணியினரின் நீண்டகால தேவையாக காணப்பட்ட மேற்படி கட்டிடம் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அதனையடுத்து மாலி செல்லவிருக்கும் குழுவின் மரியாதையை ஏற்றுக்கொண்ட இராணுவ தளபதியவர்கள், மங்கள விளக்கேற்றும் நிகழ்வின் பின்னர் புதிய கட்டிடத்தின் நினைவு படிகத்தை திறந்து வைத்தார்.

கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி அவர்களின் வழிகாட்டலின் கீழ் கெமுனு ஹேவா படையணி மற்றும் பொறியியல் சேவை படையணியினரால் இக்கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த அதேநேரம், கட்டிடத்தை திறந்து வைத்த தளபதியவர்கள் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து கட்டிடத்தை மேற்பார்வை செய்தததோடு, படையினருக்காக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள வசதிகளையும் மேற்பார்வை செய்தார்.

அதனையடுத்து விருந்துபசாரத்துடன் நிகழ்வு நிறைவடைந்திருந்ததுடன், நிகழ்வில் கலந்துகொண்ட பிரதம விருந்தினர் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியவர்களுக்கான நினைவுச் சின்னம் இராணுவ தளபதியவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. பின்னர் படையணியின் விருந்தினர் பதிவேட்டில் தளபதியவர்கள் தனது எண்ணங்களை பதிவிட்டார்.

இந்நிகழ்வில், இராணுவ பதவி நிலை பிரதானி, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி, இராணுவ வழங்கல் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.