Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st April 2022 16:51:58 Hours

ஓய்வுபெறும் நீதி பணிப்பக பணிப்பாளர் நாயகத்திற்கு இராணுவ தளபதியின் வாழ்த்து

இராணுவத்தில் 28 வருடகால சிறப்புமிக்க சேவையை நிறைவு செய்துகொண்டு ஓய்வு பெறவுள்ள நீதி பணிப்பக பணிப்பாளர் நாயகமான இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் மேஜர் ஜெனரல் எட்வர்ட் ஜயசிங்க அவர்கள் புதன்கிழமை (30) இராணுவத் தலைமையகத்திலுள்ள இராணுவ தளபதியின் அலுவலகத்திற்கு அழைப்பிக்கப்பட்டிருந்தார்.

பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள், இவ் உரையாடலின் போது மேஜர் ஜெனரல் எட்வர்ட் ஜயசிங்கவின் அர்ப்பணிப்பு மற்றும் அவர் வகித்த பதவி நிலைகளில் அவரது அர்பணிப்புடன் கூடிய வகிபாகம் என்பவற்றிற்கும் பாராட்டு தெரிவித்தார்.அதேபோன்று, ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி இராணுவத்தின் இருப்பை பாதுகாக்கும் வகையிலான சட்ட ஆலோசணைகளை வழங்கியிருந்ததோடு, தற்போதைய நியமனத்திற்கு முன்னதாக அவர் இராணுவ தலைமையகத்தின் சட்ட பணிப்பாளராக நியமனம் வகித்த போது ஆற்றிய சேவைகளுக்கும் இராணுவத் தளபதி பாராட்டு தெரிவித்தார்.

தனது சேவைக்காலத்தின் போது இராணுவ தளபதியிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒத்துழைப்புக்களுக்கு ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி நன்றி தெரிவித்தார். கலந்துரையாடலின் முடிவில், ஜெனரல் ஷவேந்திர சில்வா, பதவி விலகும் மேஜர் ஜெனரல் எட்வர்ட் ஜயசிங்கவுக்கு பாராட்டுக்களுடன் விசேட நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.

மேஜர் ஜெனரல் எட்வர்ட் ஜயசிங்கவின் விவரம் வருமாறு ;

இவர் 01 அக்டோபர் 1993 இல் பயிலிளவல் அதிகாரியாக இலங்கை இராணுவத்தில் இணைந்துடன் இராணுவத்தில் கெப்டனாக நிலையில் அதிகாரவாணையினை பெற்றார்.கொழும்பு இராணுவத் தலைமையக 3 பிரிவு சட்ட பணிப்பகத்தின் பதவி நிலை அதிகாரி தரம் III, பதவி நிலை அதிகாரி தரம் II , இராணுவத் தலைமையக சட்ட பணிப்பகத்தின் கேணல் சட்ட சேவைகள் உள்ளிட்ட நியமனங்களை வகித்துள்ளார்.இராணுவ தலைமையக சட்ட சேவைகள் பணிப்பகத்தின் பணி நிலை அதிகாரி தரம் I, ஹைட்டி ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான சட்ட பணிப்பாளர், இராணுவ தலைமையக சட்ட பணிப்பாளர் நாயகம் மற்றும் இராணுவ தலைமையக சட்ட சேவைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இராணுவ தலைமையக சட்ட பணிப்பாளர் நாயகமாகவும், சட்ட சேவைகள் பணிப்பகளத்தின் பணிப்பாளராகவும் , சட்டவாதியாகவும் நியமனங்களை வகித்த அவர் பாதுகாப்பு அமைச்சின் சட்ட ஆலோசகராகவும் நியமனம் வகித்துள்ளார்.