Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd March 2022 21:47:45 Hours

மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு சொந்த கல்லூரியில் வாழ்த்து

மாத்தளை விஜய கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்களினால் கல்லூரி வளாகத்தில் திங்கட்கிழமை (14) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “விஜய விரு அபிமன்” நிகழ்வின் போது இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு சிறப்பு கௌரவம் வழங்கப்பட்டது.

விஜய கல்லூரியின் பழைய மாணவரான மேஜர் ஜெனரல் விகும் லியனகே பாடசாலை காலத்தில் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கியதோடு, நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டினை பாதுகாக்கும் பணிகளுக்காக இராணுவத்தில் இணைந்து பாடசாலைக்கும் பெருமை தேடித்தந்துள்ளார். இந்த நிகழ்வின் போது போர் வீரரான மேற்படி அதிகாரியின் வகிபாகம் தொடர்பில் நினைவுக்கூறப்பட்டதுடன், அவரது வீரம் மற்றும் துணிச்சல் மிகுந்த செயற்பாட்டிற்காக கௌரவிக்கப்பட்டார்.

இதன்போது, மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நாட்டிற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன், நிகழ்வில் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் நிகழ்த்திய உரையின் போது, இராணுவ வாழ்வு தன்னை வாழ்வில் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் வளர்த்தெடுத்ததாக தெரிவித்தார். பாடசாலை காலங்களில் தன்னை சிறந்த குடிமகனாக வளர்ந்தெடுத்த ஆசியர்களுக்கும் தனக்கு வழிகாட்டியாக இருந்த சகலருக்கும் நன்றி தெரிவித்தார்.