Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd February 2022 07:44:32 Hours

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் ‘போரிடும் திறமை' தொகுப்பின் முதல் பிரதி இராணுவத் தளபதிக்கு வழங்கல்

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் இணையற்ற புதிய வாகனங்கள், தனித்துவமான கண்டுபிடிப்புகள், ஆக்கப்பூர்வமான மின்சாரம், இயந்திரவியல், இலத்திரனியல், ஒளியியல் மற்றும் உயிரியல் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ‘போரிடும் திறமை' (2020-2021) தொகுப்பின் முதல் பிரதி, பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களிடம் இன்று (21) இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் தளபதியும் இராணு வழங்கள் தளபதியுமான மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் அவர்களால் இராணுவத் தலைமையகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் ஓராண்டு முன்னேற்றம் தொடர்பான ஆவணப்படுத்தப்பட்ட இலக்கியங்களுடன் கூடிய சித்திரம், மாபெரும் அமைப்பின் செயல்பாட்டுத் தகுதிக்கு இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் எவ்வாறு இணையற்ற மற்றும் ஈர்க்கக்கூடிய பங்களிப்பைச் செய்கிறதுடன் அதன் கட்டளையின் கீழ் உள்ள அலகுகள் எவ்வாறு செயல்பாட்டிற்கு சிறந்த முடிவுகளைத் தருகின்றன என்பதை விளக்குகிறது. மேஜர் ஜெனரல் சமரக்கோன் இராணுவத் தளபதிக்கு சமீபத்தில் நடந்த சுதந்திர தின அணிவகுப்பில் அனைவரினது கண்களை கவர்ந்த வாகனமான அண்மையில் தயாரிக்கப்பட்ட அதிநவீன கன்னிவெடி-எதிர்ப்பு வாகனம் (MRAPV), 'யுனிகோப்' வாகனம் உட்பட இந்த தயாரிப்புகளின் செலவு-செயல்திறன், தரம் மற்றும் நீடித்து நிலைத்தன்மை குறித்து விளக்கினார்.

புதிய ஆறு சிக்ஸ்சிலிண்டர் கொண்ட இந்த டீசல் யூனிகோப்-எம்ஆர்ஏபி வாகனமானது இயந்திர மற்றும் தொழில்நுட்பத் தகுதி பெற்ற இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் பணியாளர்களின் ஆக்கப்பூர்வ மற்றும் உற்பத்தித் திறனுக்கான நினைவுச் சின்னமாக விளங்குகிறது, இது இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட என்ஜின்கள், ஸ்க்ராப் மற்றும் செஸி ஆகியவற்றினை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. இந்த வாகனமானது இலகுரக கவச வாகன வகையின் கீழ் இலங்கை கவச வாகன படையணியின் கவச திறன்களை மேம்படுத்தும். அதன் மொத்த உற்பத்தி செலவு 10 மில்லியனாகும் என்பதுடன் இறக்குமதியுடன் ஒப்பிடுகையில் ஒப்பீட்டளவில் இது மிகக் குறைந்த செலவாகும்.

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படையினர், கவச வாகனங்கள், யுனிபஃபல்ஸ் வாகனங்கள் போன்றவற்றை சமீப ஆண்டுகளில், இராணுவத்தின் வெளிநாட்டு ஐ.நா. பணிகளுக்காக தயாரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். இதனால் நாட்டுக்கு அன்னியச் செலாவணி சேமிக்கப்படுகிறது. மேலும் இராணுவத் தளபதியின் அறிவுறுத்தல்களின்படி இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியானது கடந்த காலத்தில் செய்தது போல், வெளிநாட்டுப் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட புதிய யுனிகோப்-எம்ஆர்ஏபி வாகனங்களில் அதிகமானவற்றைத் தயாரிக்க எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த நிகழ்வில் மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பாளரும் அப்படையணியின் சிரேஷ்ட அதிகாரியுமான மேஜர் ஜெனரல் தீபால் ஹத்துருசிங்க கலந்துகொண்டார்.