Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th December 2021 05:00:05 Hours

இந்திய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக இராணுவ தளபதி புதுடில்லி பயணம்

இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவட்டின் அவரது பாரியார் மற்றும் 11 இராணுவ அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஹெலிகாப்டர் விபத்தில் புதன்கிழமை (8) அன்று உயிர் நீத்தனர். அவரின் இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவான இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா வெள்ளிக்கிழமை (10) அதிகாலை புதுடெல்லி பயணமாகியுள்ளனர்.

ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்தியாவில் உள்ள தனது சக தளபதியின் துயரமான மறைவு குறித்து கேள்வியுற்றதை தொடர்ந்து கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கும் வெளியிட்ட விசேட இரங்கல் செய்தியில் ஆழ்ந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் தெரிவித்தார். இலங்கை இராணுவ படைகளின் நெருங்கிய நண்பராகவும், இராணுவத் தளபதியாகவும் அவரின் நினைவுகளை பகிர்ந்த இராணுவ தளபதி அவரது முதிர்ந்த இராணுவ அறிவு, கட்டளைகள், தலைமைத்துவ பண்புகள், தொலைநோக்குப் பணி மற்றும் இணக்கமான பணி உறவு ஆகியன புதிய யுகமொன்றிற்கும் ஆற்றல்மிக்க அவரது நிபுணத்துவம் பிராந்திய ரீதியிலான பதட்ட நிலைமைகளுக்கு மத்தியிலும் சிப்பாய்களின் மனநிலைமையை வலுவாக பேணுவதற்கு உதவியாக அமைந்திருக்கும்.

ஜெனரல் பிபின் ராவட் மற்றும் அவரது துணைவியார் திருமதி மதுலிகா ராவட் ஆகிய இருவரதும் உடல்கள் இராணுவ முறைப்படி இறுதி சடங்குகளை நிறைவேற்றுவதற்காக காமராஜ் மார்க்கில் உள்ள அவர்களது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்வதற்காக புது தில்லி முகாமிற்கு கொண்டு வரப்படும்.

இந்தியாவின் முதல் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானி ஜெனரல் பிபின் ராவட், அவரது மனைவி, திருமதி மதுலிகா ராவட் மற்றும் சில அதிகாரிகள், வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவை கட்டளைகள் மற்றும் பதவிதாரிகள் கல்லூரி விழாவில் பங்கேற்பதற்காக ஹெலிகொப்டரில் பயணம் செய்து கொண்டிருந்த வேளையில் தமிழ்நாடு மாநிலத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பகுதியில் புதன்கிழமை (8) மதியம் விபத்துக்குள்ளாகினர்.

வெள்ளிக்கிழமை (10) முற்பகல் 11.00 மணிக்கு, ஜெனரல் ராவட் மற்றும் அவரது பாரியார் மதுலிகா அவர்களின் உடல்கள் அவர்களது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படும், பிற்பகல் 2.00 மணிக்கு இராணுவ இறுதிச் சடங்குகள் முப்படைகளின் இராணுவ இசைக்குழுக்களின் மரியாதையுடன் தௌலா குவானில் உள்ள பிராரில் தகனம் செய்யப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இராணுவம், கடற்படை, விமானப்படை தளபதிகள் உள்ளிட்ட பலர் மறைந்த ஜெனரல் பிபின் ராவட்டுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் இவ்விபத்தில் உயிர் பிழைத்த ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதுடன் இந்த விபத்தில் இராணுவ அதிகாரிகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.