Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th November 2021 16:43:54 Hours

இராணுவத்தில் சிவில் நிர்வாகத்திற்காக 22 ஓய்வுபெற்ற மற்றும் பணியாற்றும் அதிகாரிகளின் மூன்றாம் தொகுதி உருவாக்கம்

இராணுவத்தில் இருந்து சிவில் வேவைக்கு அதிகாரிகளை நிறுவன தொழில்சார் பாடநெறியின் மூன்றாவது அத்தியாயம் முப்படைகளில் சேவையிலுள்ள மற்றும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் நிலை அதிகாரிகள், பிரிகேடியர் நிலையின் சிரேஷ்ட அதிகாரிகள், ரியர் அத்மிரால் நிலையின் சிரேஷ்ட அதிகாரிகள், கொமடோர் நிலை சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் எயார் கொமடோர் நிலையின் சிரேஷ்ட அதிகாரிகள் 22 பேருடைய பங்கேற்புடன் வெற்றிகரமாக இடம்பெற்றது. அதன் நிறைவு தினத்தன்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரியர் அத்மிரால் பேராசிரியர் ஜயனநாத் கொலம்பகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்நிகழ்வு கடந்த (14) மாலை வோட்டர் ஏஜ் (Water's Edge) ஹோட்டலில் இடம்பெற்றது.

எக்ஸஸ் இஞ்சினியரிங் (ACCESS Engineering PLC) தனியார் நிறுவனத்தின் குழுமத் தலைவர் திரு. சுமல் பெரேராவின் அனுசரணையுடன் இந்த திட்டத்தின் முதல் கட்டம் மார்ச் 2021 இல் ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு, ஓகஸ்ட் 2021 இல் இரண்டாவது கட்டம் ஆரம்பிக்கப்பட்டது. முப்படைகளில் பணியாற்றும் அதிகாரிகளின் நலன்கருதி இவ்வாறானதொரு திட்டம் ஆரம்பிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என தெரிவித்த இத்திட்டத்தின் நிறுவுனர் ஜெனரல் (ஓய்வு) தயா ரத்நாயக்க ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற நிகழ்வின் போது தெரிவித்தார்.

அதேபோல் இத்திட்டத்தின் கீழ் தனியார் அல்லது அரச நிறுவனங்களுக்கு தலைமை தாங்கத் தயாராக இருக்கும் இராணுவ அதிகாரிகளை நிறுவனங்களை நிர்வகிக்கும் பணியிடங்களில் பதவிகளில் அமர்த்துதல் , நிறுவன பணிகள் தொடர்பிலான மூலோபாய சிந்தனைகளை வழங்குதல், மனித வள முகாமைத்துவம் தொடர்பிலான சேவை வழங்குதல், அதிநவீன தொழில்நுட்ப தளங்களை உருவாக்குதல் உள்ளிட்ட காரணிகளுக்கான உதவிகளை வழங்க முடியுமென ஐபிஎம்எ – எச்ஆர் ஐக்கிய அமெரிக்க (IPMA-HR.USA) நிறுவனத்தின் இலங்கைக்கான வசதியளிபாளரும், சர்வதேச மனித வள முகாமைத்துவ (HRM) நிறுவனத்தின் நிருவாக பணிப்பாளருமான திரு. ரஞ்சீவ குலதுங்க தெரிவித்துள்ளார்.

முப்படை தளபதிகளின் வழிகாட்டலின் கீழ் மேஜர் ஜெனரல் கேடிஏடிஎஸ் கொலம்பதந்திரி RWP RSP USP Psc IG இலங்கை விமான சேவைகள் நிர்வாக பணிப்பாளர் எயார் மார்ஷல் ரொஷான் தியன்வில, கொமடோர் விஜித மாரப்பன மற்றும் இராணுவத்திலிருந்து சிவிலுக்கான இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரி கேணல் சுஜீவ ரத்நாயக்க ஆகிய சிரேஷ்ட அதிகாரிகள், நிறைவேற்று பணிப்பாளர் நாயக அலுவலகத்தின் உதவியுடன் இந்த பாடத்திட்டத்திற்கான பெயர் விபரம் கோரப்பட்டிருந்தது. அதன்படி கண்டங்களுக்கிடையிலான மனிவள முகாமைத்துவ நிலையத்தின் (IIHRM) ஆலோசகர் ரஞ்ஜீவ குலதுங்க முன்னிலையிலான ஓமார் கான் அவர்களின் தலைமையில் மேற்படி பாடநெறியில் அமர்வுகளை நடத்துவதற்கான கண்டங்களுக்கிடையிலான மனிவள முகாமைத்துவ நிலையத்தின் (IIHRM) ஆலோசகர் குழுவுவொன்று முன்மொழியப்பட்டது. அதற்கமைய இந்த நிறுவனத்தின் ஆலோசகர்களாக சேவையாற்றிய சென்ஸ்ர இன்டர்நெஷனல் நிறுவனத்தின் பேராசிரியர் மார்லன் பெரேரா , ஜீம் டெலன்ட் டிவலப்மண்ட் பிரெண்டிக்ஸ் குழுமத்தின் குமார கல்ஹேனகே, கண்டங்களுக்கிடையிலான மனிவள முகாமைத்துவ நிலையத்தின் (IIHRM) பிரதான ஆலோசகர் ரஞ்சீவ குலதுங்க, சென்ஸால் ஆசியா நிறுவனத்தின் பிரதானி ரஞ்சித் த சில்வா, ஐஎல்எம். யூகேஈ முப்தி ஹாசிம் சென்ஸால் நிறுவனத்தின் ரொஷான் டயஸ், சர்வதேச மனிவள முகாமைத்துவ நிலையத்தின் ( IIHRM) ஆலோசகர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் பிரெட்லி எமர்ஸ்ன், சென்ஸால் குளோபல் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஓமார் இதற்கு முன்னதாக நடத்தியிருந்த பாடநெறிகளுக்காக வழங்கிய ஒத்துழைப்புக்காக சர்வதேச மனிவள முகாமைத்துவ நிலையத்தின் ( IIHRM) சிரேஷ்ட ஆலோசகர் ருக்மனி மனோகர் ஆகியோருக்கு அத்மிரல் பேராசிரியர் கொலம்பகே அவர்களின் கரங்களால் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.

புகழ்மிக்க இராணுவ வாழ்வை நிறைவு செய்யும் இந்த சிரேஷ்ட அதிகாரிகளின் திறன்கள் இலங்கையின் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்காக பயன்படுத்திக்கொள்வதற்காக இது சிறந்த சந்தர்ப்பமாகும் என்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகள் நாட்டிற்கு விலைமதிக்க முடியாத சொத்துக்களாவர் என்றும் மேற்படி விலைமதிப்பற்ற திட்டங்களை முன்னெடுக்கும் இலங்கை வர்த்தக மையத்துடன் (Ceylon Chamber of Commerce) இணைந்து செயற்படுவதானது திருப்தியளிப்பதாகவும் எக்ஸஸ் இஞ்சினியரிங் நிறுவனத்தின் தலைவர் சுமால் பெரேரா தெரிவித்தார். ஜெனரல் (ஓய்வு) தயா ரத்நாயக்க, இராணுவ தளபதியாக இருந்த காலத்தில் உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த பாடநெறியை இலங்கை தொண்டர் படையணிக்குள் செயற்படுவதற்காக முன்னிலையிலிருந்து செயற்பட்டதாகவும் சர்வதேச மனிவள முகாமைத்துவ நிலையத்தின் பிரதான ஆலோசகர் ரஞ்சீவ குலதுங்க மற்றும் பேராசிரியர் தினேஸ் வட்டவல ஆகியோரும் தெரிவித்தனர்.

பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த பாடநெறியில் முப்படைகளிக் முன்னாள் சிரேஷ்ட அதிகாரிகள் தங்களது தெரிவுகளை பரிமாறிக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைப்பதோடு, வியாபார செயற்பாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய செயற்பாடுகள் தொடர்பில் தெரிவுகளை பெற்றுகொள்ளும் நோக்கில் பங்குபற்றும் அதிகாரிகளுக்கு தங்களது திறன்களை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பு கிட்டுமெனவும் சர்வதேச மனிவள முகாமைத்துவ நிலையத்தின் உலக நாடுகளுக்கான ஆலோசகர் பேராசிரியர் குணபால நாணயக்கார அவர்கள் தெரிவித்தா்ர. அதற்கமைய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அத்மிரால் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே அவர்களின் அணுசரமையுடன், இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா ஆகியோருடன் இணைந்து இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்ததோடு, இலங்கை கடற்படையின் பிரதானி ரியர் அத்மிரல் வை.என் ஜயரத்ன, மற்றும் இலங்கை விமானப்படையின் பதவி நிலை பிரதானி எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன போயோ பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இணை அனுசரணை வழங்கும் ஏலியன் (Allion) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட குறித்த திட்டத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் www.mcsrilankacenter.com ஆனது, பெரும் நிறுவனங்களுடன் நேரடியான தொடர்புகளில் ஈடுபடுவதற்கான இலவச அணுகலை வழங்கும் அதிகாரிகளின் சுய விபரங்களை காண்பிக்கும் - இது தவிர தலைமைத்துவ வேலை வாய்ப்பிற்காக இலங்கை வர்த்தக சம்மேளனம் இந்த இணையதளத்தைப் பயன்படுத்துகிறது. பட்டய கணக்கிட்டு முகாமைத்துவ நிறுவனம் (CIMA), இலங்கை மற்றும் அமெரிக்க தலைமைத்துவ மற்றும் முகாமைத்துவ நிறுவனம் (The Institute of Leadership and Management ) ஆகியன முறையே 'வழிகாட்டி மற்றும் வழிகாட்டல் மேம்பாட்டுப் பங்காளியாகவும், மெய்நிகர் உலகளாவிய மேலாண்மை கற்றல் பங்குதாரராகவும் இணைந்துள்ளது.

திருமதி ஜஹாரா அன்சாரி தலைமையிலான பட்டய கணக்கிட்டு முகாமைத்துவ நிறுவனம் (CIMA) இலங்கை அனைத்து வழிகாட்டிகளுக்கும் வழிகாட்டல் முயற்சியை அறிமுகப்படுத்தியது. பட்டய கணக்கிட்டு முகாமைத்துவ நிறுவன (CIMA) முன்னாள் மாணவர்களின் ஆதரவை அவர்களின் புதிய வாழ்க்கைக்கு வழிகாட்டவும் வடிவமைக்கவும் பட்டய கணக்கிட்டு முகாமைத்துவ நிறுவனம் (CIMA) அதன் வசதி கூட்டாளர் ஐஎச்ஆர்எம் (IHRM ) உடன் இணைந்து தொடர்ச்சியான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக மாதாந்த கற்றல் தொடர்புகளை தொடர்ந்து வழங்கும். இராணுவத்திலிருந்து சிவிலுக்கான முன்னாள் மாணவர்களுக்கான முதல் மெய்நிகர் கற்றல் வாய்ப்பை 2021 நவம்பர் 15 முதல் 75 உறுப்பினர்களுக்கும் CIMA வழங்கும் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

ஐக்கிய இராச்சியத்தின் ஐஎல்எம்(ILM.UK) கடந்த மாதம் ஐஎச்ஆர்எம் (IHRM) உடன் இணைந்து இராணுவத்திலிருந்து சிவிலுக்கான பயிற்சியாளர்கள் டூன் 2 (Tun II) உறுப்பினர் மற்றும் 49 நிகழ்நிலை உலகளாவிய பயிற்சி தொகுதிகளுக்கான அணுகலைப் பெறுவார்கள். இராணுவத்திலிருந்து சிவிலுக்கான பயிற்சியாளர்கள் தங்கள் பெயருக்குப் பின் வெறும் 60 ஜீபிக்கு (60GB) ILM.UK என்ற பின்னொட்டைப் பயன்படுத்துவதன் ற்கான ஊடாக உள்நுழைய முடியும் என்று ஐஎல்எம் (ILM) பிராந்திய பிரதிநிதி ஆலோசகர் திரு முப்தி மஷிம் தெரிவித்தார். கூல் டெம்போ (Cool-Tempo) அதன் நிகழ்வு பங்காளியாக இராணுவத்திலிருந்து சிவிலுக்கான பாடநெறி முயற்சியை ஆதரித்துள்ளது. மற்றும் பிக் ஜொப் (Big Jobs) தொடர்ந்தும் பங்குபற்றளர்களின் சுயவிபர் கொவையின் அபிவிருத்தி பங்காளியாக உள்ளது என இராணுவத்திலிருந்து சிவிலுக்கான இலங்கை மையத்தின் வசதியளிப்பாளர் திரு ரஞ்சீவ குலதுங்க தெரிவித்தார்.

பங்குபற்றாளர்கள் மற்றும் வளவாளர்கள் பிரதம அதிதி வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் (பேராசிரியர்) ஜயநாத் கொலம்பகே (ஓய்வு), இராணுவத்திலிருந்து சிவிலுக்கான பாடநெறியின் இலங்கைக்கான ஸ்தாபகர் புரவலர் ஜெனரல் தயா ரத்நாயக்க (ஓய்வு), வள பங்காளி மற்றும் ஸ்தாபகர் எக்ஸஸ் இஞ்சினியரிங் நிறுவனத்தின் குழுமத்தின் தலைவர் திரு. சுமல் பெரேரா, வசதியளிப்பாளர் , ஐஎச்ஆர்எம் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு. ரஞ்சீவ குலதுங்க, பட்டயக் கணக்கிட்டு முகாமைத்துவ (CIMA) நிறிவனத்தின் இலங்கைக்கான முகாமையாளர் திருமதி. ஜஹாரா அன்சாரி மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் ஐஎல்எம் (ILM.UK) பிராந்திய பிரதிநிதியான திரு. முப்தி ஹாஷிம் ஆகியோருடன் இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானி உட்பட கடற்படை மற்றும் விமானப்படையினர் பலரும் இணைந்திருந்தனர். ரியர் அட்மிரல் வை என் ஜயரத்ன, நிர்வக பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் பியன்வில, இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் அஜித் கொலம்பதந்ரி, கடற்படை செயலாளர் கொமடோர் விஜித மரப்பன ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.