Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th October 2021 22:55:58 Hours

இஸ்ரேல் தூதரக பாதுகாப்பு இணைப்பாளர் இராணுவ தளபதியுடன் கலந்துரையாடல்

இலங்கையுடன் இணைந்ததாக புது டில்லியில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கேணல் அசாப் மஹ்லர் செவ்வாய்க்கிழமை (5) பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை இராணுவ தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது இஸ்ரேலிய பாதுகாப்பு ஆலோசகர் இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு புரிதல்கள், பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள் என்பன தொடர்பில் எண்ணங்களை பகிர்ந்துகொண்டார். அத்தோடு இலங்கைக்குள் கொவிட் – 19 தொற்றுநோய் பரவலை ஒழிக்கும் நோக்குடன் இலங்கை இராணுவம் ஆற்றிவரும் பணிகள் தொடர்பிலும் ஆலோசித்தார்.

அத்தோடு இரு இராணுவங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவ தெரிவுகளை பரிமாற்றிக்கொள்ளல் மற்றும் மேம்படுத்திக்கொள்ளல் என்பவற்றின் முக்கியத்துவம் குறித்தும் மேற்படி சந்திப்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.

ஜெனரல் சவேந்திர சில்வா முதன்முறையாக இலங்கைக்கு வருகை தந்த பாதுகாப்பு இணைப்பாளருக்கு நன்றி தெரிவித்ததோடு, அவருக்கு நினைவு பரிசொன்றையும் வழங்கி வைத்தார்.