Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th October 2021 12:48:01 Hours

இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான, 'மித்ர சக்தி' கள பயிற்சிகள் அம்பாறை போர் கள பயிற்சி கல்லூரியில் ஆரம்பம்

'மித்ர சக்தி' கள பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையை குறிப்பிடுவதன் அடையாள அம்சமாக, பயிற்சி பணிப்பாளரும் 53 வது படைப்பிரிவு தளபதியுமான மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்களினால் அம்பாறையிலுள்ள போர்கள பயிற்சி கல்லூரியில் இன்று (5) கொடிகளை கையளிக்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கை மற்றும் இந்தியா இடையேயான கூட்டுப் பயிற்சியான ‘மித்ர சக்தி’ தொடர்ச்சியாக 8 வது மீளாய்வு செயற்பாடுகளில் இலங்கை படையினருடன் 120 இந்திய இராணுவ சிப்பாய்களும் கலந்துகொண்டுள்ளனர்.

முன்னாள் பணிப்பாளரால் கள பயிற்சி கொடியினை தற்போதைய கள பயிற்சிகளின் கட்டளை அதிகாரியிடம் வழங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து போர்கள பயிற்சி கல்லூரி வளாகத்தில் படையினரின் ஆயுத பயிற்சிகள் இடம்பெற்றன. மேற்படி நடவடிக்கையானது திட்டமிடப்பட்ட பிரிவுகளுக்கு மத்தியில் புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிகழ்வில் அம்பாறை போர்கள பயிற்சி கல்லூரியின் தளபதி, முன்னாள் பிரதி பணிப்பாளர், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தியா-இலங்கை இருதரப்பு இராணுவ உறவுகளை ஊக்குவிக்கும் வகையில் ஒக்டோபர் 2 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்த கட்டளை அதிகாரி கேணல் பிரகாஷ் குமார் தலைமையில் 'மித்ர சக்தி' கள பயிற்சிகளுக்காக வருகைத்த தந்த குழுவினர் தொடர்பாக 17ம் திகதி பயிற்சியின் நிறைவில் கேணல் கிரிஷ் கோடியல், கேணல் ஜோன் டேனியல் மற்றும் இந்திய இராணுத்தின் பெண் அதிகாரி சுலேஜ் மீரா ஆகியோர் மதிப்பீடு செய்வர்.

நாடுகடந்த பயங்கரவாதம், செயல்பாட்டு திறன்கள் , கூட்டு தந்திரோபாய நடவடிக்கைகளை நடத்துதல், ஒருவருக்கொருவர் சிறந்த தொடர்பாடல் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது போன்றவற்றை மேம்படுத்தும் நோக்கில் இப் பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இப்பயிற்சிகள் விஜயபாகு காலாட் படை சிப்பாய்களின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ளன.

குறித்த 120 இந்திய இராணுவப் படையினர் இரண்டு வார கால பயிற்சியில் பங்கேற்க உள்ளதோடு, பிராந்திய - பிரிவுகள் மட்டத்தில் சர்வதேச கிளர்ச்சிகளுக்கு எதிர் நடவடிக்கை, பயங்கரவாத எதிர்ப்புச் செயற்பாடுகள் என்பன மேற்படி பயிற்சிகளில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன. இதில் இலங்கை இராணுவத்திலிருந்தும் 120 படையினர் பங்கேற்க உள்ளதோடு பயிற்சிகள் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, 53 வது படைப்பிரிவு தளபதியும் பயிற்சி பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே மற்றும் பிரதி பயிற்சி பணிப்பாளர் ஆகியோரால் கண்காணிக்கப்படவுள்ளன.

இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பு, புரிந்துணர்வு மற்றும் இரு சேவைகளுக்கும் இடையிலான உறவுகளின் பிணைப்புகளை வலுப்படுத்தல் என்பவற்றை நோக்கமாக கொண்டு இலங்கையிலும் இந்தியாவிலும் மாறி மாறி நடைபெறுகிறது.

மேற்படி கள பயிற்சிகள் உயிரியல் குமிழி அடிப்படையில் உரிய சுகாதார ஒழுங்கிவிதிகளை பின்பற்றி முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.