Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th August 2021 17:13:19 Hours

கொவிட் தடுப்பு செயலணியின் தலைவரால் ஒழுங்குவிதிகள் அறிவிப்பு

கொவிட் - 19 கட்டுப்பாடுகள் தொடர்பிலான அதிமேதகு ஜனாதிபதி அவர்களுடனான சந்திப்பை தொடர்ந்து கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா அவர்களினால் வெள்ளிக்கிழமை (6) வெளியிட்ட அறிக்கை கீழ்வருமாறு.

500 க்கும் மேற்பட்ட இருக்கைகள் கொண்ட மண்டபங்களில் இடம்பெறும் திருமண வைபவங்களின் போது அதிகபட்சமாக 150 பேர் மாத்திரமே பங்கேற்கலாம் என்பதோடு 500 க்கும் குறைவான இருக்கைகளை கொண்ட மண்டபங்களில் இடம்பெறும் திருமண வைபவங்களின் போது 100 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர். அதேபோல் இறுதிச் சடங்கு ஒன்றின் போது அதிகபட்சமாக 25 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

அத்தோடு சகல அரசாங்க நிகழ்வுகளும் 2021செப்டம்பர் 01 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், அரச நிறுவனங்களின் ஊழியர்கள் நிறுவன தலைவரின் தீர்மானத்திற்கு அமைய அன்றாடம் பணிக்குச் செல்ல முடியும். (முடிவு)