Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th July 2021 13:30:08 Hours

தளபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக கேர்ணல் நிர்வாகங்களுக்கான சிறந்த தீர்மானமெடுத்தளுக்கு அறிவூட்டும் பட்டறை

இலங்கை இராணுவத்தின் கேர்ணல் நிர்வாகம் மற்றும் வழங்கல் நியமனதாரர்களுக்கான ஒரு நாள் பட்டறை திங்கள்கிழமை (19) கொஸ்கம இராணுவ வழங்கல் கட்டளை தலைமையகத்தில் நடைபெற்றது. இதன் போது நிர்வாகம் மற்றும் வழங்கல் செயல்பாட்டின் செயல்பாட்டு அம்சங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

பாதுகாப்புப் பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் எண்ணக்கரு மற்றும் வழிகாட்டுதலின் பேரில் பிரதி இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் வசந்தா மடோலா மற்றும் வழங்கல் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் பிரேமலால் ஆகியோர் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இராணுவ அமைப்புகளில் வினைதிறன், விளைதிறன், தொழில்நுட்பங்கள் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி அந்த பாத்திரங்களை மேலும் நெறிப்படுத்தவும் மேம்படுத்தவுமாக இந்த பட்டறை இருந்தது.

நாட்டின் பெரும் மனித மூலதனம் என்ற வகையில் இராணுவத்தின் வழங்கல் திட்டமிடுவதில் கேர்ணல் நிர்வாகம் மற்றும் வழங்கல் கொண்டிருக்கும் மதிப்பை மேம்படுத்துவது, நிதி கையாளுதல் மற்றும் முகாமை தொடர்பாக ஸூம் தொழில்நுட்பத்தின் மூலம் ஜெனரல் ஷவேந்திர சில்வா 40 கேருணல்களுக்கு உரையாற்றினார்.

இராணுவ மூலோபாய திட்டம் 2020 – 2025 இன் உயர்ந்த ஒழுக்கத்தை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த ஜெனரல் ஷவேந்திர சில்வா, ஒருவர் வாழ்க்கையில் மிக உயர்ந்த குறிக்கோளை அடைய வேண்டுமென்றால், அது தங்களால் நிறுவனத்தின் சொத்துக்களின் முறையான முகாமையில் தங்கியுள்ளது என இராணுவத் தளபதி மேலும் கூறினார்.

பிரதி இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் வசந்த மடோலா இந்த முழு நாள் பட்டறையின் நோக்கங்கள், குறிக்கோள்கள் மற்றும் பங்கேற்பாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் இறுதி முடிவுகளை விளக்கினார்.

இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியியளர் பணிப்பக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் இந்து சமரகோன், பொறியியல் சேவைகள் பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் கே.எம்.எஸ்.குமார, இராணுவ வழங்கல் சேவைகள் பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் பிரியந்த வீரசிங்க, வழங்கல் மற்றும் போக்குவரத்து பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் ஹிரோஷா வணிகசேகர, உள்ளக கணக்காய்வாளர் பிரிகேடியர் மாலன் டி சொய்சா ஆகியோர் வளவாளர்களாக பங்குபற்றினர்.

இராணுவ பதவிநிலைப் பிரதானி அலுவலகம், இலங்கை இராணுவ தொண்டர் படை, இராணுவ வழங்கல் கட்டளைகள், பாதுகாப்புப் படை தலைமையகங்கள், படைப்பிரிவுகள், முன்னரங்கு பாதுகாப்பு முகாம்கள், பயிற்சி கட்டளைகள், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த பயிற்சி பட்டறையில் பங்கேற்றனர்.