Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th March 2021 10:20:35 Hours

இராணுவத்தின் ஒருங்கிணைப்பில் யாழ். மக்களுக்கு சக்கர நாற்காலிகள்

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம் நீர்க்கொழும்பு லயன்ஸ் கழகத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணம் - வேலனை மத்திய கல்லூரியில் சிவில் இராணுவ ஒத்துழைப்புத் திட்டமாக ஞாயிற்றுக்கிழமை (28) 11 சிவில் மக்களுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கிவைக்கப்பட்டது.

யாழ். பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா , சர்வதேச லயன்ஸ் கழகத்தின் தலைவர் திரு. தேவா டி பீட்டர் ஆகியோருடன் மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டதுடன், நிகழ்வில் தமிழில் உரையாற்றிய மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா யாழ். குடாநாட்டின் நல்லிணக்கம், நல்லெண்ணம் மற்றும் ஒருமைப்பாடு என்பவற்றை மேம்படுத்துவது தொடர்பாகவும் சிவில்-இராணுவ ஒத்துழைப்பை மேலும் பலப்படும் என எடுத்துரைத்ததுடன் லயன்ஸ் கழகத்தின் எண்ணக்கருவிற்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.

அதனையடுத்து திரு. தேவா டி பீட்டர், கொவிட் -19 வைரஸ் பரவலை தடுப்பதற்கு படையினர் வழங்கும் பங்களிப்பை பாராட்டினார். அதனையடுத்து ஒரு தொகுதி தனிநபர் பாதுகாப்பு அங்கிகள் மற்றும் முகக் கவசங்களையும் இராணுவத்தினருக்கு வழங்கி வைத்தார்.

51 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுமித் பிரேமலால், பிரிகேடியர் பொதுப்பணி, சிரேஸ்ட அதிகாரிகள், யாழ். பாதுகாப்பு படையின் சிப்பாய்கள் மறுறும் லயன்ஸ் கழக பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். Buy Sneakers | Nike KD 14 Colorways, Release Dates, Price , Iicf