Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th March 2021 22:20:35 Hours

நிப்போன் அமைப்பின் ஆதரவுடன் இராணுவத்தினரால் மேலும் பல புலமைப்பரிசில்கள்

இலங்கையின் கல்வி மற்றும் கலாசார அமைப்பான நிப்போன் அமைப்பு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்துடன் இணைந்து இணைந்து யாழ்ப்பாணத்தின் மேலும் 12 மாணவர்களை யாழ்பாண நகர நாக விகாரைக்கு அழைப்பித்து ஞாயிற்றுக்கிழமை (28) புலமைப்பரிசில்கள் வழங்கியது.

நிப்போன் அமைப்பின் பொதுச் செயலாளர் வண. மீகாஹதென்ன சந்திரசிறி தேரரின் ஏற்பாட்டில் யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களின் பங்கேற்புடன் மேற்படி மாணவர்களுக்கு தங்கள் கல்வியைத் தொடர்வதற்கான மாதாந்த நிதி மற்றும் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நாக விகாரையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு 512 பிரிகேட்டின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் ஜகத் குமார மற்றும் 512 வது பிரிகேட்டின் 14 வது கஜபா படையின் பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

மேலும் இந்நிகழ்வில் பௌத்த பிக்குகள், சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள், அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டதுடன், அதே வார இறுதியில் நாவற்குழி வித்தியாலய மாணவர்களுக்கும் நிப்போன் அமைப்பு புலைமை பரிசில்களை வழங்கியிருந்தது. Nike sneakers | Sneakers