Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th March 2021 21:20:43 Hours

தளபதியின் வழிகாட்டலில் பொறியியல் சேவைப்படை மற்றும் 112 வது பிரிகேட் இணைந்து வறிய குடும்பத்திற்கு புதிய வீடு

மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் 112 வது பிரிகேட் மற்றும் 17 வது பொறியியல் சேவை படையினர் இணைந்து பண்டாரவளை துல்கொல்லவில் வசிக்கும் வறிய கும்பத்திற்கு சிரச ஊடக வலையமைப்பின் உதவியுடன் சிரச நிவாச திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இந்த வீட்டின் நிர்மாணச் செயற்பாடுகளுக்கு இராணுவத்தினரின் பங்களிப்பு வழங்கப்பட்டது.

மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமஹேவா அவர்களின் ஆலோசணைக்கு அமைவாக பொறியியல் சேவை படையின் தொழில்நுட்பம் மற்றும் திறமையான சிப்பாய்களின் பங்களிப்புடன் நி சிரச நிவாச திட்டத்தின் நிதி ஒத்துழைப்புக்கள் ஊடாக திட்டம் நிறைவு செய்யப்பட்டது.

சனிக்கிழமை (27) 'சிரச நிவச’ நிகழ்ச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எம்டிவி மற்றும் எம்பிசி வலையமைப்பின் தலைவர் திரு சஜித் ரத்நாயக்கவுடன் பிரதம அதிதியாக மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவா அவர்கள் கலந்துகொண்டார்.

வறுமையில் வாடிய செல்வி பத்ம குமாரி அவர்களின் வாழ்க்கை நிலைமையை கருத்தில் கொண்டு, அவருடைய செலவீனங்களை கட்டுப்படுத்திக்கொள்ள உதவும் வகையில் இராணுவத்தின் கட்டுமானப்பணிகளுக்கான மனித வள உதவிகளுடன் வீட்டை நிர்மாணிப்பதற்கான நன்கொடைகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டன.

அதன்படி பாரம்பரிய மரபுகளுக்கமைய பிரதம விருந்தினரும், நன்கொடையாளர்களும் சுப நேரத்தில் பெயர்பலகையை திறந்துவைத்தல் , மங்கள விளக்கேற்றல் மற்றும் பால் பொங்குதல் நிகழ்வுகளில் பயனாளியுடன் கலந்துகொண்டனர்.

அதன்படி இந்நிகழ்வில் எம்பிசி வலையமைப்பின் ஒருங்கிணைப்பு பணிப்பாளர் திரு. பிரியந்த விஜேசிங்க, 112 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனுர திசநாயக்க மற்றும் சிரச குழுமத்தின் அதிகாரிகள், பயனாளிகளின் உறவினர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. Nike air jordan Sneakers | Nike - Sportswear - Nike Tracksuits, Jackets & Trainers