Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th March 2021 17:19:10 Hours

இளைமரதன்குளம் மரையிலுப்பைகுளம் நீர்க் கசிவு படையினரால் தடுப்பு

சில தினங்களுக்கு முன்பு ஓமந்தை இளைமரதன்குளம் மரையிலுப்பைகுளம் ஏற்பட்ட நீர் கசிவு தொடர்பாக பொதுமக்கள் அளித்த தகவலுக்கமைய வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 56 ஆவது படைப் பிரிவின் 563 பிரிகேடின் 21 வது இலங்கை சிங்க படையின் சிப்பாய்களின் விரைவு நடவடிக்கைகள் காரணமாக பேரிடர் தவிர்க்கப்பட்டது.

96 ஏக்கருக்கும் அதிகமான நெல் வயல்கள் மற்றும் மரக்கறி பயிர் செய்கைக்கு தண்ணீர் வழங்கும் குறித்த குளத்தின் நீர்மட்டம் அதிகரித்தமையால் உடைப்பு நிலையினை அடைந்தமையால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக 563 பிரிகேட்டின் உதவியை நாடியிருந்தனர்.

குறித்த தகவல் கிடைத்தவுடன், வவுனியா மாவட்ட செயலாளர் திரு. சமன் பந்துலசேன படையினருக்கு அவசியமான போக்குரவத்து வசதிகள் மற்றும் மண்ணையும், நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளின் சேவையினையும் பெற்றுகொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி ஹேமந்த பண்டார. 56 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன துனுவில ஆகியோரின் வழிகாட்டலுடன், 563 பிரிகேட் தளபதி பிரிகேடியர் பண்டுக பெரேரா மற்றும் 21 இலங்கை சிங்கப் படையின் கட்டளை அதிகாரி மேஜர் என்.பி.எஸ்.கே.நில்மல்கொட அவர்களின் மேற்பார்வையின் கீழ் பாதிக்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்ட படையினர் விரைவு நடவடிக்கைகள் ஊடாக ஏற்படவிருந்த அனர்த்தத்தை தவிர்த்தனர்.

அதனையடுத்து படையினருடன் கலந்துரையாடிய அப்பகுதி பொதுமக்கள் படையினரின் விரைவு செயற்பாடுகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்ததுடன், பொது மக்களின் நலனுக்காக எந்த நேரத்திலும் இராணுவம் தயாராக இருக்கின்றமையை வரவேற்றனர். Nike Sneakers | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK