Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th March 2021 20:37:55 Hours

58 வது படைப்பிரிவினரால் புத்தளத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கிவைப்பு

தொலைதூர கிராமங்களில் வசிக்கும், வறிய குடும்பங்களுக்கு உதவி கரம் கொடுக்கும் நோக்கத்துடன் புத்தளத்தின் சின்ஹவில்லவட்டவ பகுதியில் அமைந்துள்ள 58 வது படைப்பிரிவு தலைமையத்தினால் 10 ஆரம்ப பிரிவு பாடசாலைகளுக்கு எழுதம் பலகைகளும், ஆரம்ப பிரிவு மாணவர்கள் உட்பட 77 மாணவர்களுக்கு ஆடைகள், விளையாட்டு பொருட்கள், புத்தகங்கள் மற்றும் பாதணிகள் என்பன சனிக்கிழமை (20) வழங்கி வைக்கப்பட்டன.

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட நிபுணத்துவ இலங்கையர்கள் சங்கம் என்ற அமைப்புடன் இணைந்து கொழும்பு 5, நாரஹன்பிடாவைச் சேர்ந்த மனோஜ் வர்னபால அவர்களால் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான மேற்படி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்ணான்டோவின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த நிதி உதவி வழங்கப்பட்டிருந்தமையும் சிறப்பம்சமாகும்.

இதன்போது சிறுவர்கள் சகலரையும் 58 ஆவது படைப்பிரிவு தலைமையகத்திற்கு அழைப்பித்து 58 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பக ரணசிங்க அவர்களின் அழைப்பின் பேரில் நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்ணான்டோவால் பயனாளிகளுக்கு சலுகை பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மகாகோன்வேவா சிட்டசமாதி பரமி விகாரையின் வண கடவத்த தர்மசிறி தேரர் மற்றும் அருட்தந்தை வண. செஹான் பெர்ணான்டோ ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.

அத்தோடு 58 வது படைப்பிரிவின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் சம்பக ரணசிங்க, , பெற்றோர்கள், அதிகாரிகள், அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். bridge media | Nike