Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd March 2021 14:00:22 Hours

படையினரால் நவற்துறையின் சுற்றியுள்ள சதுப்பு நிலத்தில் 500 மரக்கன்றுகள் நடும் பணிகள்

இராணுவத் தளபதியின் 'துரு மிதுரு நவ ரட்டக் எனும் ' திட்டத்திற்கு அமைய தேசிய வனப்பகுதியை விரிவுபடுத்துவதற்கும் நாட்டை அழகுபடுத்துவதற்காக, யாழ்பாணத்தில் உள்ள 14 ஆவது கஜபா படையிணியின் படையினரல் 200 மீட்டர் பரப்பளவிலான சதுப்புநிலத்தில் 500 சதுப்புநில மரக் கன்றுகள் நடும் திட்டம் ஞாயிற்றுக்கிழமை (21) ஆம் திகதி யாழ் நவற்துறையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த திட்டமானது யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களின் மேற்பார்வையில் 14 ஆவது கஜபா படையிணியின் படையினர் மற்றும் 512 ஆவது பிரிகேட்டின் படையினர் மற்றும் உள்ளூர் சிவில் அதிகாரிகள் ஆகியோரின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டன.

சதுப்பு நிலத்தில் 500 க்கும் அதிகமான கன்றுகளை நடுவதற்காக இந்த நிலப்பரப்பு வனத்துறையால் படையினருக்கு இனங்காட்டிக்கொடுக்கப்பட்டதுடன் குறித்த கன்றுகள் நன்கொடையாகவும் வழங்கப்பட்டன. இந்த திட்டத்தில் பிரதேச செயலகம், மாவட்ட வனத்துறை அதிகாரிகள், பிராந்திய வன அதிகாரி மற்றும் வனத்துறை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். Running sneakers | adidas garwen spezial white shoes - New In Shoes for Men