Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th March 2021 20:47:59 Hours

தொழில்வாண்மை மேம்பாட்டு பயிற்சி அதிகாரிகள் இராணுவ தலைமையகத்தில் முதன்மை பணி நிலை அதிகாரிகளின் அனுபவத்தை பகிர்துக் கொள்ளல்

புத்தல அதிகாரிகள் தொழில்வாண்மைமேம்பாட்டு மையத்தில் சிரேஸ்ட தளபதிகள் பாடநெறி இல -1 இன்36 அதிகாரிகள் தங்களின் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இராணுவத் தலைமையகத்தில் முதன்மை பணி நிலை அதிகாரிகளுடன் இராணுவ வழங்கல் தொடர்பான அனுபவங்களை காலை (24) பகிர்ந்துக் கொண்டனர்.

இராணுவத் தளபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இராணுவ பதவி நிலைப் பிரதானிமேஜர் ஜெனரல் சேனரத் பண்டார தலைமையிலான தளபதிகள் பேரவையினால் குறித்த36 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினால் அவர்களது கட்டளை உத்திகளின் அறிவு மட்டம் மற்றும் வழங்கல் அறிவு நேர்முக பரீட்சை மற்றும் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பரீட்சிக்கப்பட்டது.

இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சேனரத் பண்டார, பிரதி இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் வசந்த மடோல, இராணுவ தொண்டர் படை படைத் தளபதிமேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட, நிதி முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்தன ஹந்தின்முள்ள , போர்கருவிகள் பணிப்பாளர் நாயகம்மேஜர் ஜெனரல் சந்தன மரசிங்க, வழங்கல் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜயந்த கொடிதுவக்கு, இராணுவச் செயலாளர்மேஜர் ஜெனரல் அஜித் கொலம்பதந்திரி, அதிகாரிகள் தொழில்வாண்மை மேம்பாட்டு மையத்தின் தளபதிமேஜர் ஜெனரல் சுவர்ண போத்தொட்ட , பயிற்சிப் பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் கபில தொலகே அதிகாரிகள் தொழில்வாண்மை மேம்பாட்டு மையத்தின் பிரதம பயிற்சி ஆலோசகர் கர்ணல் சுரேஷ் குரே, மற்றும் சில பயிற்றுநர்கள் ஆகியோர் ஏற்பாடுகளுடன் தொடர்புப்பட்டிருந்தனர் . url clone | Upcoming 2021 Nike Dunk Release Dates - Iebem-morelos