Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd March 2021 22:54:22 Hours

மாதுருஓயவில் இடம்பெற்ற கள பயிற்சிகள்

பாக்கிஸ்தான் இராணுவம் மற்றும் இலங்கை இராணுவம் இடையே நீண்டகால நல்லெண்ணம் மற்றும் புரிந்துணர்வு பிணைப்புகளை மேம்படுத்தி கொள்ளும் நோக்கில் கள பயிற்சி “ஷேக் ஹேண்ட்ஸ் -1” அதன் 6 ஆவது நாளாக மாதுருஓயா விசேட படையணி பயிற்சி பாடசாலையில் திங்கட்கிழமை (22) நடைப் பெற்றது. இப் பயிற்சியில் படையினரின் சிறப்பு இராணுவ பயிற்சி போர் கண்காணிப்பு உடற்பயிற்சி ஆகியவையை அடிப்படையாக கொண்டு ஒத்திகை இடம்பெற்றது.

இதன்போது விசேட படையணி தலைமையகத்தின் நிலைய தளபதி பிரிகேடியர் நிசங்க ஈரியகம, அவர்கள் பயிற்சி பெற்ற பாகிஸ்தான் மற்றும் இலங்கை படையினரை விசேட படையணி பயிற்சி மையத்தின் தளபதி கேர்ணல் பிரசாத் ரந்துனுடன் இணைந்து வரவேற்றார்., தொடர்ந்து இராணுவத்தின் சிறந்த பயிற்சி பாடசாலைகளில் ஒன்றான விசேட படையணியின் ஒழுங்கமைக்கப்பட்ட தயாரிப்புகளின் பங்கு குறித்து அவர்களுக்கு விளக்கினார்.

ஒரு சுருக்கமான வரவேற்பு உரையின் பின்னர் இப்பயிற்சி பணிப்பாளர் பிரிகேடியர் சஞ்சீவ பெர்னாண்டோ குழுத் தலைவர்களை அறிமுகப்படுத்தினார், மேலும் நடைமுறைகளை முறையாகத் தொடங்குவதற்கு முன்பு அன்றைய நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு சூழலை விளக்கினார். கடந்த சில நாட்களில் பயிற்சியின் பங்கேற்பாளர்கள் விரிவுரைகள் மற்றும் கள பயிற்சிகளில் , மினேரியாவில் காலாட்படை பயிற்சி மையம் மற்றும் மதுருஓயா இராணுவ பயிற்சிப் பாடசாலைகளில் பங்கேற்றனர். அத்தோடு அவர்கள் சிகிரியா, பொலன்னறுவை மற்றும் மின்னேரியா தேசிய பூங்கா போன்ற சுற்றுலா இடங்களுக்குச் சென்றதன் பின் துப்பாக்கிச் சூடு பயிற்சி பெற்றனர்.

பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தொலைநோக்கு கருத்தாக்கத்தின் அடிப்படையில் மார்ச் 17 ம் திகதி சாலியபுர கஜபா படைத் தலைமையத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வின் இறுதி நிகழ்வில் கஜபா படையணி மற்றும் விஷேட படைகளுக்கான படைத் தளபதியான ஜெனரல் சவேந்திர சில்வா மார்ச் 31 ம் திகதி கலந்துக்கொள்ளுவார் எதிர்பார்க்கப்படுகிறது. Buy Sneakers | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger