Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th March 2021 19:19:10 Hours

வலுவான இரு நாட்டு உறவுகளின் முக்கியத்துவம் தொடர்பாக இராணுவத் தளபதிக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி வலியுறுத்தல்

பாகிஸ்தான் இராணுவ பதவி நிலை பிரதானியான ஜெனரல் கமர் ஜாவிட் பாஜ்வா அவர்களின் அழைப்பை ஏற்று , இலங்கை இராணுவத் தளபதியும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் தேசிய தின ஒருங்கிணைந்த சேவை அணிவகுப்பு என்றும் அழைக்கப்படும் பாகிஸ்தான் தின நிகழ்வில் கெளரவ விருந்தினராக கலந்து கொள்வதற்காக பாகிஸ்தானுக்கு விஜயத்தை மேற்கொண்ட அவர் பாகிஸ்தான் ஜனாதிபதி அதிமேதகு கலாநிதி ஆரிப் ஆல்வி அவர்களை வெள்ளிக்கிழமை (19) ஜனாதிபதி மாளிகையில் வைத்து சந்தித்தார்.

இந்த நாட்டிற்கு வருகை தந்த ஜெனரல் ஷவேந்திர சில்வா, பாகிஸ்தான் படையினருக்கு தனக்கு அழைப்பு விடுத்தமைக்கு தனது நன்றியைத் தெரிவித்ததோடு, இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷவின் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் பாகிஸ்தான் இராணுவத்திற்கு தெரிவித்தார்.

பாகிஸ்தான் ஜனாதிபதி கலாநிதி ஆரிப் அல்வி அவர்கள், பயங்கரவாதத்தை தோற்கடித்த இலங்கை உலகின் மிக வெற்றிகரமான நாடு என்பதை தெரிவித்துக்கொண்டதோடு, பாகிஸ்தானும் மிகவும் திறம்பட செய்துள்ளது என்று கூறினார். "ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பாகிஸ்தான் இலங்கையை கடுமையாக ஆதரிக்கிறது, குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நிற்கவும் நாங்கள் கடந்த காலத்தில் செயற்பட்டுள்ளோம் "என்று ஜனாதிபதி உறுதிப்படுத்தினார்.

பயங்கரவாத ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பிற்கு கண்டனம் தெரிவித்த அவர், எதிர்காலத்தில் பாதுகாப்பு, சுற்றுலா, கடல் பாதுகாப்பு, கல்வி, சுற்றுச்சூழல், வணிகம் மற்றும் வர்த்தகம் போன்ற துறைகளில் இரு நாடுகளும் நெருக்கமாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். கொவிட் -19 நோய்க்கு தொற்று எதிரான நடவடிக்கைக்கு இலங்கைக்கு பாராட்டிய அவர், தடுப்பு வழிமுறைகளுக்கும் திருப்தி தெரிவித்தார்.

“நான் இதற்கு முன்பு மூன்று முறை உங்கள் நாட்டிற்குச் வருகை தந்துள்ளேன், அனுராதபுரத்தில் காணப்படும் அழகையும் பண்டைய பாரம்பரியத்தையும் நான் மிகவும் அறிவேன். எதிர்காலத்தில் மீண்டும் இலங்கைக்கு வருகை தர இருக்கின்றேன் என்று எதிர்பார்க்கிறேன், பாகிஸ்தானில் உள்ள பௌத்த தளங்களுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்த அனுபவத்தை கற்றல் அனுபவமாக மேம்படுத்தும் என்று நம்புகிறேன். சார்க் மற்றும் வர்த்தகம், விளையாட்டு, கல்வி, சுற்றுச்சூழல், வணிகம் மற்றும் வர்த்தகம் போன்ற பிற துறைகளை மேலும் மேம்படுத்த நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று கலாநிதி அல்வி மேலும் தெரிவித்து கொண்டார்.

பாகிஸ்தான் இலங்கையின் உண்மையான நண்பராக இருந்து வருவதாகவும், அண்மையில் பாகிஸ்தான் பிரதமரின் வருகையின் பின்னர் தற்போதுள்ள நல்லெண்ணத்தையும் புரிந்துணர்வையும் மேலும் மேம்படுத்தியதாகவும் ஜெனரல் ஷவேந்திர சில்வா பாகிஸ்தான் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

1980 களில் இருந்து இலங்கையின் ஆயுதப்படை உள்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கு பாக்கிஸ்தானின் நிபந்தனையற்ற ஆதரவை இலங்கை ஒருபோதும் மறக்காது, சாத்தியமான அனைத்து உதவிகளும் மற்றும் பாகிஸ்தானின் ஆயுதப்படைகள் அளித்த சிறந்த பங்களிப்பும். இந்த இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் விளைவாக, இரு படைகளும் தங்கள் தொழில் திறனை விரிவுபடுத்த முடிந்தது, இலங்கையில் நடந்து வரும் ‘Shake Hands’, என்ற இராணுவப் பயிற்சியில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ஜெனரல் ஷவேந்திர சில்வா சுட்டிக்காட்டினார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன்வைக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக பாகிஸ்தான் எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக நிற்கிறது. அந்த ஆதரவு இலங்கையின் உண்மையான நண்பராக கடந்த, நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திலும் உண்டு. இந்த விஜயம் நீண்ட காலத்திற்கு முன்பே நடந்திருக்கலாம் என்றாலும், தொற்றுநோய் பரவுவதால் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகள் காரணமாக அது சாத்தியப்படவில்லை என்று இராணுவ தளபதி ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் பாகிஸ்தான் அரசின் பல சிரேஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின்போது நல்லுறவு மற்றும் நல்ல இருதரப்பு உறவுகளின் அடையாளமாக ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் பாகிஸ்தான் ஜனாதிபதியிடம் சிறப்பு நினைவு சின்னத்தையும் வழங்கினார்.

பாகிஸ்தானில் இடம் பெறும் மதிப்புமிக்க தேசிய தினத்தை ஒருங்கிணைப்பு நிகழ்வின் அணிவகுப்பானது (மார்ச் 23) பாகிஸ்தானின் அபிலாஷைகளையும் சாதனைகளையும் வெளிப்படுத்தி, நடைப்பெறவுள்ளதுடன், இந்த நிகழ்வில் பாகிஸ்தான் ஜனாதிபதி, பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பல தேசிய மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். short url link | Air Jordan