Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th March 2021 15:20:18 Hours

ரம்பொடையில் காணாமல் போன யாத்திரிகர் படையினரால் மீட்பு

நுவரெலியா ரம்பொடைக்கு யாத்திரை சென்ற நபரொருவர் அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது சனிக்கிழமை (13) காணாமல் போயிருந்த 33 வயது நபரினை 11 ஆவது படைப்பிரிவின் 3 வது இலங்கை சிங்கப் படையினர் , விஷேட அதிகரிப்படை மற்றும் பொலிஸாருடன் இணைந்து மீட்டெடுத்தனர்.

சிவனொளிபாத மலைக்கு புனித யாத்திரை செல்வதற்காக சனிக்கிழமை (13) சென்றிருந்த நாமல் சுலோச்சன சத்துரங்க என்னும் குறித்த இளைஞர் (14) ஆம் திகதி அதிகாலை வேளையில் அவர் தங்கியிருந்த ரம்பொடை ஹோட்டலில் இருந்து காணாமல் போயுள்ளார் என அவருடைய நண்பர்கள் பொலிஸாருக்கு அறிவித்திருந்தனர்.

பின்னர் பொலிஸார் அருகிலுள்ள 3 (தொ) இலங்கை சிங்கப் படையினரின் உதவியை நாடியிருந்ததுடன். உடனடியாக அவ்விடத்துக்கு விரைந்த 37 படை வீரர்கள் அடங்கிய குழுவினர் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமஹேவா மற்றும் 112 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் அனுர திஸாநாயக்கவின் வழிகாட்டலில் 3 (தொ) இலங்கை சிங்கப் படையின் கட்டளை அதிகாரி மேஜர் டபிள்யூ.ஏ.எம். ரணதிலக்க அவரகளின் மேற்பார்வையில் தேடும் பணிகளில் ஈடுப்பட்டனர்.

பல மணி நேர தேடுதல் பணிகளின் பயனாக ஞாயிற்றுக்கிழமை (14) குறித்த யாத்திரிகர் ரம்பொடை நீர்வீழ்ச்சிக்கு அருகில் புதர்களால் சூழப்பட்ட பகுதியொன்றிலிருந்து படையினரால் மீட்கப்பட்டதுடன் பொலிஸாரின் உதவியுடன் நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் கொத்மலை பொலிஸாரினால் முன்னெடுக்கப்படுகின்றது.

அண்மைய காலங்கள் காணாமல் போனவர்களின் உடல்களை மீட்பதில் பாதுகாப்பு படைகளில் பங்களிப்பு முதன்மையாக காணப்படுவதுடன் மடுல்சீமை, பதுளை பகுதிகளில் காணாமல் போனவர்களின் உடல்களும் படையினரால் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வறான துணிச்சலான படை வீரர்களின் செயற்பாட்டிற்கு இராணுவ தளபதி ஜெனரால் ஷவேந்திர சில்வா அண்மையில் பாராட்டுக்களை தெரிவித்திருந்தமை சிறப்பம்சமாகும். jordan Sneakers | Air Jordan Release Dates 2020