Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th March 2021 21:10:13 Hours

தளபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட நடமாடும் வைத்திய சேவைத் திட்டத்தின் கீழ் ஹசலக கிராம மக்களுக்கு மருத்துவ உதவி

சிறந்த மருத்துவர்களின் ஆலோசணைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் கிராமப்புரங்களில் வசிக்கும் வறிய மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் வடிவமைக்கப்பட்ட திட்டத்துகமைய ஞாயிற்றுக்கிழமை (14) இலங்கை இராணுவ வைத்தியசாலையின் வைத்தியப் படையினரால் ஹசலக பகுதியில் பல்துறை மருத்துவ நிபுணநர்கள் / வைத்தியர்களின் பங்கேற்புடன் மருத்துவ ஆலோசணை வழங்கும் நிகழ்வு இடம் பெற்றுடன் இந் நிகழ்வில் நூற்றுக் கணக்கிலான கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

'சிரச டிவி சுவ யாத்ரா' மற்றும், இலங்கை இராணுவ வைத்திய படையினரின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த கூட்டுத் திட்டம் பொது வைத்தியர்கள், இருதய வைத்தியர்கள், மகப்பேற்று வைத்தியர்கள், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஈ.என்.டி நிபுணர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், சிறுநீரக மருத்துவர்கள், நரம்பியல் நிபுணர்கள், குழந்தை மருத்துவர்கள் உள்ளிட்டவர்களை கொண்ட நடமாடும் வைத்திய சேவை இலங்கை இராணுவ வைத்திய சேவை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் வைத்தியர் கிருஷாந்தா பெர்னாண்டோவின் மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் எக்ஸ்ரே பிரிவு மற்றும் மருத்துவ படுக்கைகள் உள்ளிட்ட பிற மருத்துவ உபகரணங்களும் இதன்போது எடுத்துச் செல்லப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.

மிகவும் மரியாதைக்குரிய ஹசலக உயிர் நீத்த போர் வீரரான காமினி குலரத்ன என்பவரின் தாயாரும் இந்த மருத்துவ முகாமில் சேவை பெறுவதற்காக வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தாகும். இந்நிகழ்வு ஹசலக மினிப்பே பண்டாரநாயக்க வித்தியாலய வளாகத்தில் நடைபெற்றது.

இதன்போது வெளி நோய்கள் மற்றும் பலவிதமான காயங்களுக்குமான சிகிச்சைகள் வழங்கப்பட்டதுடன், பலவிதமான நோய்கள் தொடர்பில் சிறப்பு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அத்தோடு இந்த நடமாடும் வைத்திய சேவை மக்களின் வரவேற்பை பெற்றதுடன், , இந்த பகுதி மக்கள் தங்களுக்கான மருந்துவ வசதிகளை பெற்றுக்கொள்ள கண்டி மற்று பதுளை போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலமை காணப்படுகின்றது.

11 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சாரத சமரகோன், பிரிகேடியர் வைத்தியர் கிருஷாந்தா பெர்னாண்டோ மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ நிபுணநர்கள், அதிகாரிகள் சிப்பாய்கள் நிகழ்வின் ஏற்பாட்டிற்கு பங்களிப்புச் செய்திருந்தனர். Sports News | Top Quality adidas Yeezy 700 V3 "Eremiel" GY0189 , Ietp