Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th March 2021 17:37:01 Hours

கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் வாழைச்சேனை மக்களுடன் கலந்துரையாடல்

கொவிட் – 19 நோயால் பாதிக்கப்பட்ட ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள புதைக்குழியை பார்வையிட்டதுடன் அங்குள்ள சுகாதார ஊழியர்களுடன் கலந்துரையாடவும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (13) நேரத்தை ஒதுக்கிக்கொண்டார்.

கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரான ஜெனரல் ஷவேந்திர சில்வா மேற்படி புதைக்குழியின் அடக்கச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் இராணுவ வீரர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுடன் கலந்துரையாடிய பின்னர், முன்னெச்சரிக்கை செயற்பாடுகள் குறித்து தீர்க்கமாக ஆராய்ந்தார். பின்னர் அங்கு வந்த பொதுமக்கள் சிலரும் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுடன் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.

அதனையடுத்து கொழும்பிற்கு திரும்பி வருகின்ற வேளையில் இராணுவ தளபதியின் வாகனம் எதிர்பாரத வகையில் இடையில் நிறுத்தப்பட்டதுடன், அப்பகுதியிலுள்ள பொது மக்களுடைய நல்வாழ்வு பற்றியும் அவர் கேட்டறிந்துக்கொண்டார். latest Nike release | Air Jordan Release Dates Calendar