Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th December 2020 09:44:23 Hours

இராணுவ கல்வியற் கல்லூரி பயிலிளவல் அதிகாரிகள் இராணுவத் இராணுவத் தளபதியிடம் தங்களின் இறுதி ஆய்வறிக்கைக்களை சமர்பிப்பு

தியதலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பாடநெறி இலக்கம் 88, 88 (B) மற்றும் பெண்கள் பாடநெறி இலக்கம் 18 ஆகியவற்றின்பயிலிளவல் அதிகாரிகளின் பாடநெறி பாடத்திட்டத்தின் சிறப்பு அங்கமான பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா உடனான சந்திப்பு இராணுவத் தலைமையகத்தில் இன்று (11) காலை இடமபெற்றது.

கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் அரசின் வெற்றிகரமான செயற்பாடுகளில் இராணுவத் தளபதியின் வகிப்பங்கு மற்றும் அணுகுமுறை எனும் தலைப்பிலான இறுதி விளக்கக்காட்சியை இராணுவத் தளபதியிடம் முன்வைத்து கலந்துரையாடலில் பெண் பயிலிளவல் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பங்குபற்றினர்.

அந்த பயிலிளவல் அதிகாரிகள் வெகுவிரைவில் தங்களின் அதிகாரவாணை விடுகை அணிவகுப்பில் பங்குபற்றவுள்ளனர்.

இந்த கலந்துரையாடலின் போது இராணுவத் தளபதி இராணுவத் தொழில் வாய்ப்புகளின் முக்கியத்தும், ஒழுக்கமுள்ள முன்மாதிரியான அதிகாரியாக இருத்தலும் பின்பற்றலும், மூலோபாய சிந்தனை, தீர்மானம் எடுக்கும் ஆற்றல் மற்றும் செயல்பாட்டு திறன்கள், விசுவாசம் , ஒருமைப்பாடு மற்றும் கொவிட 19 பரவலை கட்டுப்படுத்துவதில் இராணுவத்தின் செயற்பாடு ,வகிபங்கு மற்றும் பணிகள் எடுத்துரைத்தார். இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி பிரிகேடியர் கிருஷாந்த ஞானரத்ன , கல்விப் பணிப்பாளர் ஷமிந்த லியனகே பலன குழு கட்டளையாளர் மேஜர் தேசபிரேம பண்டாரநாயக்க, ஆய்வு பயிற்றுவிப்பாளர் மேஜர் துஷார விதாரன, பாடநெறி பொறுப்பதிகாரி மேஜர் தனுஷ்க எதிரிசிங்க பெண் பயிற்சி பொறுப்பதிகாரி லெப்டிணட் கங்குலி தர்மசேன ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துக் கொண்டனர். Nike Sneakers | NIKE