Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th December 2020 17:07:21 Hours

தேசத்தின் ஆசீர்வதிப்பதற்கான 3 வார தொடர் பிரித் பாராயணம் சுதந்திர சதுக்கத்தில் நிறைவு

தொற்றுநோயை ஒழிப்பதற்காக நாட்டிற்கு ஆன்மீக ஆசீர்வாதங்களை வழங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சின் பூரண ஒத்துழைப்புடன் இராணுவம் ஆரம்பித்த மூன்று வார கால தொடர் பிரித் பாராயணம் கடற்படை, விமானப்படை என தொடர்ந்து சுதந்திர சதுக்கத்தில் இன்று (9) காலை தொடர்ச்சியாக பாராயணம் செய்த துறவிகளுக்கு ஹீல் தான (காலை அன்னதானம்) வழங்கலுடன் நிறைவடைந்தது. .

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலை (8) நிறைவு பிரித் பாராயண (ஹமாரா பிரித) நிகழ்வில் இணைந்துக் கொண்டு மத வழிப்பாடுகளை மேற்கொண்டார். பௌத்த துறவிகளுக்கு கிலன்பச வழங்கி புத்தர் பூஜைக்கு அழைத்தார். தொடர்ந்து தனது பாரியார் திருமதி ஷிராந்தி ராஜபக்ஷ, தலைமை நீதிபதி, பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டிணட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் LOLC நிறுவனத்தின் தலைவர் (நிகழ்விற்கான அனுசரனையாளர்) திரு இஷார நானாயக்கர மற்றும் அவரது துணைவியார் தலைவர் (நிகழ்வின் முக்கிய ஆதரவாளர்கள்) மற்றும் வருகை தந்தவர்களின் பாரியார்கள், முப்படை அதிகாரிகள், சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் மகா பிரித் பாராயணத்தைக் கேட்டனர்.

கடந்த நவம்பர் மாதம் 18 ம் திகதி பிரதம விருந்தினராக அதிமேதகு ஜனாதிபதி கலந்துக் கொண்டு பௌத்த மரபுகளுக்கு அமைவாக மகா சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களைக் அழைத்து மூன்று வார தொடர் பிரித் பாராயணத்தை தொடங்கி வைத்தார். பாதுகாப்பு செயலாளர், சகோதரி சேவைகள் மற்றும் பொலிஸார், அரச அதிகாரிகள் மற்றும் பலரின் ஒத்துழைப்புடன் பௌத்தாலோக மாவத்தை ஸ்ரீ கல்யாணி யோகாஷ்ர்ம தலைமை தேரர் வண..பஹல விடியெல்ல ஜனானந்தபிதான தேரர் வழிகாட்டுதலின் கீழ் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. நிகழ்வு இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை முறையே பாராயணத்தை சீராக நடாத்த ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

பாராயண நிறைவில் இன்று காலை (9) முப்படையினரால் மொத்தம் 75 பௌத்த பிக்குகளுக்கு ஹீல் தான (காலை உணவளித்தல்) வழங்கப்பட்டது, அங்கு பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும்மான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள், இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன், அனுசரனையாளர்கள் மற்றும் சிரேஸ்ட முப்படைகளின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

21 நாள் பிரித் பாராயணத்தின் பின்னர் நாட்டின் அனைத்து முப்படை சேவை நிலையங்கள், பொலிஸ், கொவிட் -19 பாதிக்கப்பட்ட பகுதிகள் ஆகியவற்றிக்கு 100,000 ஆசீர்வதிக்கப்பட்ட 'பிரித் நீர் கொள்கலன்களை விநியோகிக்க எதிர்பார்க்கிறது. இதேபோல் ஆசீர்வதிக்கப்பட்ட தண்ணீரை வானில் இருந்து தெளிக்கவும் மேலும், இந்த நிகழ்வின் ஊடாக நாடு முழுவதும் உள்ள விகாரைகளுக்கு 700 புத்தர் சிலைகளைவழங்கவும் திட்டப்பட்டுள்ளது.latest Running | Nike Shoes