Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th December 2020 21:24:06 Hours

வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த 413 மாடுகளை மீட்ட படையினர்

சூறாவளி மற்றும் கனத்த மழை காரணமாக மன்னாரிலுள்ள பெரியமடு குள அணைக்கட்டின் நீர் மட்ட உயர்வினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட 413 மாடுகளை, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 65 வது படைப் பிரிவின் 652 வது மற்றும் 653 வது பிரிகேட் படைப் பிரிவுகளின் படையினர், கிராமவாசிகள் மற்றும் இடர் முகாமைத்துவ நிலைய ஊழியர்களின் ஒத்துழைப்புடன் கடந்த 48 மணி நேரத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை 6 ஆம் திகதி மாலை மீட்டெடுத்தனர்.

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்கள் 65 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டிகிரி திசாநாயக்க அவர்களுடன் இணைந்து, 652 வது பிரிகேட் படைப் பிரிவுத் தளபதி பிரிகேடியர் உதய ஹேரத் மற்றும் 653 வது பிரிகேட் படைப் பிரிவுத் தளபதி பிரிகேடியர் சாங்க ஜயமஹா ஆகியாரின் மேற்பார்வையில் குறித்த அவசர மீட்பு திட்டத்தினை தொடங்கி வைத்தார். கிராமவாசிகளின் வாழ்வாதார மற்றும் விவசாய வருமான வழிகளை ஏற்டுத்தும் குறித்த மாடுகளை மீட்கும் பணியில் நூற்றுக்கணக்கான இராணுவச் சிப்பாயினர் கலந்து கொண்டனர்.

குறித்த படையணிகளின் கட்டளை அதிகாரிகளின் வழிகாடலின் கீழ், 24 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் மற்றும் இடர் முகாமைத்துவ நிலைய ஊழியர்கள், மாடுகளின் உரிமையாளர்களுடன் இணைந்து, குள அணைக்கட்டுக்கருகே வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த 300 மாடுகளை முதலில் மீட்டெடுத்தனர். அதேவேளை 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 24 வது கஜபா படையணியின் படையினர் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட 113 மாடுகளை மீட்டனர்.

653 வது பிரிகேட் படைப் பிரிவின் தளபதியின் வழிகாட்டலின் கீழ் , குறித்த மாடுகளை காப்பாற்றுவதற்காக 3 வது கொமாண்டோ படையணியின் படையினர் அவசரமாக இரண்டு படகுகளை வழங்கி மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஆயினும், படையினர் பின்னர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிதறடிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட 12 கால்நடைகளின் சடலங்களைக் கண்டெடுத்தனர். குறித்த மீட்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (6) பிற்பகல் முடிவடைந்தன. அதேநேரம் படையினர் உடனடியாக அந்த பகுதியில் ஒரு கால்நடை அறுவை சிகிச்சை நிபுணரை அழைத்து வந்து அந்த கால்நடைகளுக்கு தேவையான மருந்து மற்றும் ஊசி மருந்துகளையும் வழங்கினர்.

கிழக்கு கடற்கரையை நோக்கி ‘புரேவி’ சூறாவளி வீசுவதற்கு சில மணிநேரத்திற்கு முன்னர் வன்னி பிரதேசத்திற்கு விஜயத்தினை மேற்கொண்ட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் பாதகமான வானிலை தொடர்பான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் இருகுமாறு படையினரிடம் அவசியமான அறிவுறுத்தல்களை வழங்கினார்.Adidas shoes | Ανδρικά Nike