Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st October 2020 11:15:13 Hours

கடந்த 24 மணிநேரத்திற்குள் 186 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது-நொப்கோ தெரிவிப்பு

இன்று (21) காலை அறிக்கையின் பிரகாரம், கடந்த 24 மணி நேரத்திற்குள் கொவிட் - 19 தொற்றாளர்கள் 186 பேர் இணங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் 06 பேர், (அதில் ஜபானிலிருந்து வருகை தந்து மிரிச மந்தாரா தனிமைப் படுத்தல்மையத்தில் 03, கட்டாரில் இருந்து வருகை தந்து பெல்வெகர தனிமைப்படுத்தல் மையத்தில் 01, ரஷ்யாவில் இருந்து வருகை தந்து பொதுசேவைப் படையணி தனிமைப்படுத்தல் மையத்தில் 02) தனிமைப்படுத்தப்பட்டவர்களாவர். ஏனைய 180 பேர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் என கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.

இன்று (21) காலை 6.00 மணியளவில் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொவிட் கொத்தணியில் பதிவான முழு தொற்றாளர்களின் எண்ணிக்கை 2344 பேர் ஆகும். அவர்களில் 1041 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள், ஏனைய 1303 பேர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளான ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 510 நபர்கள் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் இன்று (21) தங்களது வீடுகளுக்கு செல்லவுள்ளனர். அவர்களில் நிபுன பூஸ்ஸ தனிமைப்படுத்தல் மையத்தில் 13, பியகம விலேஜ் தனிமைப்படுத்தல் மையத்தில் 15, விமான நிலைய விங்ஹப் தனிமைப்படுத்தல் மையத்தில் 05, கொக்கல ரிசோட் தனிமைப்படுத்தல் மையத்தில் 25, பெரியகாடு தனிமைப்படுத்தல் மையத்தில் 10, பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் 25, பிரன்டிக்ஸ் பூனானி தனிமைப்படுத்தல் மையத்தில் 257, சீகிரி விலேஜ் தனிமைப்படுத்தல் மையத்தில் 145, ஹோட்டல் ஜெட்விங் புளூ தனிமைப்படுத்தல் மையத்தில் 01, கெம்லட் பீஜ் தனிமைப்படுத்தல் மையத்தில் 01 ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைபடுத்தப்பட்டவர்கள் ஆவர்.

அதேபோல் இன்று காலை (21) வரை மொத்தம் 55432 பேர் தங்களின் தனிமைப்படுத்தல் காலங்களை நிறைவுசெய்துக் கொண்டு தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இன்று காலை (21) வரை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 74 தனிமைப்படுத்தல் மையங்களில் (இராணுவ தனிமைப்படுத்தல் மையங்கள் 63, கடற்படை தனிமைப்படுத்தல் மையங்கள் 7, விமானப்படை தனிமைப்படுத்தல் மையங்கள் 4) 8323 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று 20 ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 8021 ஆகும். அத்தோடு இதுவரை இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்பிசிஆர் பரிசோதணைகளின் எண்ணிக்கை 398196 ஆகும்.

முழுமையாக சுகமடைந்த 17 பேர் இன்று காலை (21) 0600 மணியளவில் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இவர்களில் 03 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களும், மீதமுள்ள 14 பேர் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளான ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புகளை ணியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. (முடிவு) latest Nike Sneakers | New Releases Nike