Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th October 2020 22:32:13 Hours

இராணுவத்தினரின் கொவிட்-19 மனிதாபிமான பாத்திரங்களை களங்கப்படுத்த முயற்சித்தமைக்கு மறுப்பு தெரிவிப்பு

திட்டமிடப்பட்ட மூலோபாய வழிகாட்டுதல்களுக்கமைவாக, ஒரு தொற்றுக்குள்ளான நபரின் எந்தவொரு தொடர்புபட்டவர்களையும் தனிமைப்படுத்தவோ அல்லது அழைத்துச் செல்லவோ தேவைப்பட்டால், கொவிட்-19 தடுப்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள படையினர், அவர்கள் அனைவரையும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு தெரிவிப்பதுடன், குறைந்தபட்சம் இது போன்ற தடுப்பு வெளியேற்றங்களுக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றனர், ஆனால் பலசந்தர்ப்பங்களில் படையினர் வந்தவுடன் வெளியேற்றப்பட்டவர்கள், அத்தகைய பயணங்களுக்கு பேருந்துகளில் ஏறுவதற்கு அதிக நேரம் எடுக்கின்றனர். ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் பணிவுடன் பொறுத்துக் கொள்ளப்படுகின்றன. களுத்துரையில் சில நபர்களினால் குற்றம் சாட்டப்பட்டவாறு எந்தவொரு முப்படையினரும் அத்தகைய ஏற்பாடுகளுக்கு 'ஒருநொடி' மட்டுமே வழங்கமாட்டார்கள், மேலும் அவர்களால் குற்றம்சாட்டி கூறப்படும் சமைக்கப்படாத 'மூல மீன்களை' படையினர் வழங்கமாட்டார்கள் ,இது வெளிப்படையாக ஆர்வமுள்ள சம்பந்தப்பட்ட குழுவினரின் வெவ்வேறு நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப அல்லது மறைக்கப்பட்ட செயல்திட்டங்களின் முன்னோடிகளாக காணப்படுகிறது என்று கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் 18 ஆம் திகதி தொலைக்காட்சில் வினவப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் தெரிவித்தார்.

தொற்று நோயாளியுடன் நேரடி தொடர்பு கொண்ட சந்தேகத்திற்கிடமான நபர்களை அழைத்துச் செல்ல மட்டுமே நாங்கள் இருக்கிறோம். அவர்களின் இக்கட்டான நிலையை நாங்கள் முழுமையாக புரிந்துகொள்கிறோம், குறித்த தொற்று சமூகத்திற்கு எளிதில் பரவக்கூடும் என்பதால் சூழ்நிலையின் தன்மையினை அவர்கள் உணர வேண்டும். "அதிக பணிச்சுமை இருந்த போதிலும், நான் தனிப்பட்ட முறையில் அந்த குற்றச்சாட்டுகள் மற்றும் கருத்துக்களை விசாரித்தேன், ஆனால் அவை முற்றிலும் தவறானவை என்று கண்டறிந்தேன். உண்மையில், சில சமயங்களில் நான் அந்த உணவின் புகைப்படங்களைக் கூட பெற்றுக்கொண்டு அதிகாரிகளுடன் நெருக்கமாக தொடர்பு கொள்கிறேன். குறித்த தனிமைப்படுத்தல் மையங்கள் முப்படையினரால் நிர்வகிக்கப்படுகின்றன. மேலும் இந்த நெரிசல் முதல் சில நாட்களில் 800 நபர்களின் வெளியேற்றங்களை சமாளிக்க வேண்டியிருந்தது. சமுதாயத்தில் குறித்த நோய் பரவுவதைத் தடுக்க நாங்கள் முயற்சிக்கிறோம் என்பதை மக்கள் கவனிக்க வேண்டும், மேலும் சந்தேகத்திற்குரிய நபர்களை அழைத்துச் செல்வது தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படுகிறது. நாங்கள் மற்றவர்களின் நலனுக்காக அவர்களின் மெத்தைகளையும், கொசு வலைகளையும் கொடுத்த ஒரு குழுவாகும், எனவே அவர்களின் அர்ப்பணிப்பு சேவைகள் இவ்வாறு அவமதிக்கவோ தரமிறக்கவோ கூடாது என்று மேலும் தெரிவித்தார்.

ஆடைத் தொழிற்சாலையின் தொழிலாளர்கள், அவர்களது தொடர்புகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரை நமது சொந்த இலங்கை சகோதர சகோதரிகளாகக் கருதி மிகச் சிறந்த முறையில் நாங்கள் நடத்துகிறோம். பிளாஸ்டிக் போத்தலில் குடிப்பது போன்ற கடந்த காலக்கதைகளிலும் இதே போன்ற துரோக முயற்சிகள் இருந்தன. உணர்வுள்ளயாராவது ஒரு 'வினாடியில்' தயாராகமுடியுமா? "என்றுகொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் நேர்காணலின் போது தெரிவித்தார்.

இதுவரை 52,000 க்கும் மேற்பட்ட நபர்களின் தனிமைப்படுத்தல் பொறிமுறையானது திறம்பட முடிக்கப்பட்டுள்ளதுடன். ,நாடு முழுவதும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 10,000 க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், இச்செயற்பாடுகளானது சுகாதார அதிகாரிகளால் நன்கு பாராட்டப்பட்டது. இது அவர்களின் நேர்மறையான பின்னூட்டங்களின் சான்றாகும், மேலும் தேசிய அளவில் சுகாதாரப் பாதுகாப்பின் ஒரு பகுதியாக பொது சுகாதார பரிசோதகர்கள், தொற்று நோயியல் நிபுணர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுக்கு இராணுவம் ஒரு மனிதாபிமான பங்களிப்பினை வழங்குகின்றது. கடற்படை மற்றும் விமானப் படையுடன் இராணுவம் தேசத்தின் பாதுகாவலர்களாக நமது சமுகத்தின் அதிக நலனுக்காக இந்த கொடிய வைரஸை மற்ற பகுதிகளுக்கு மேலும் பரப்புவதைக் குறைப்பதை உறுதிப்படுத்த தனது சிறந்த முயற்சியைச் செய்து வருகிறது. எனவே பொது அறிவுள்ள அனைத்து மக்களும் இராணுவம் வகிக்கும் சவாலான பாத்திரங்களைப் புரிந்து கொண்டு இந்த முயற்சிகளுடன் தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும், அவற்றில் சில தற்செயலாக குறைபாடுகளைக் கொண்டிருக்கக் கூடும், மேலும் வைரஸ் மேலும் பரவுவதற்கான சாத்தியக் கூறுகளை தடுக்க ஒத்துழைக்குமாறு இராணுவத் தளபதி கேட்டுக்கொண்டார்.

ஒரு உள்ளூ ஆயூர் வேதமருத்துவர், கட்டுநாயக்க பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் களுத்துரை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளார், அவரிடம் இன்று (18) காலை அதே தொலைக்காட்சி தொடர்புகளை மேற்கொண்டு வினவியதற்கு அந்த மையங்களுக்கு சுகாதார அதிகாரிகளுடன் பணியாற்றும் படையினர் அவர்களுக்கு 2-3 காய்கறிகளுடன், மீன், இறைச்சி அல்லது முக்கிய உணவுக்கான முட்டைகள், ஒப்பீட்டளவில்,தரமான உணவுகளை வழங்குகின்றனர், மற்றும் பெரும்பாலான நேரங்களில் போதுமான இலை காய்கறி (பலா) வகைகளுடன் வழங்குகின்றனர் என்று தெரிவித்ததுடன் ஆர்வமுள்ள சில நபர்களினால் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குறித்த தீங்கிழைக்கும் கருத்துகளையும் அவர் நிராகரித்தார்.

உலகளாவிய சுகாதார சவாலால் முழு நாடும் பாதிக்கப்படும் போது, ஒரு பெரிய எதிர்கால சுழ்ச்சியை நோக்கமாகக் கொண்டு, படையினர் மீது ஆதாரமற்ற மற்றும் இட்டுக் கட்டப்பட்ட வேண்டுமென்றே புனையப்பட்ட அனைத்து ஏளனம் மற்றும் குற்றச்சாட்டுகளை லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா கடுமையாக மறுக்கின்றார்.

அதே கலந்துரையாடலில், ஊடகவியலாளர்கள் தங்கள் சொந்த விசாரணைகளை நடத்தி, அந்த தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகள் எவ்வாறு பின்பற்றப்படுகின்றன என்பதையும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்காமல் அங்கு என்ன நடக்கிறது என்பதையும் தங்களுக்குத் தெரியப்படுத்துமாறு அவர் ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொண்டார். (நிறைவு) Sports brands | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5