Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th August 2020 15:00:29 Hours

அராலியில் உயிர் நீத்த இராணுவ உயரதிகாரிகளுக்கு கௌரவ அஞ்சலி

கடந்த காலத்தில் அராலி பகுதியில் பயங்கரவாத தாக்குதலின் போது உயிர் நீத்த அதிகாரிகளான கஜபா படையணியை ஸ்தாபித்தவரும், கஜபா படையணியின் முதல் தந்தையும் தற்போதைய இராணுவ தளபதியை உருவாக்கியவருமான மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன, ரியர் அத்மிரால் மொஹன் ஜயமஹ, லெப்டினன்ட் கேர்ணல் எச்.ஆர் ஸ்டீபன், லெப்டினன்ட் கேர்ணல் ஜி.எச். ஆரியரத்ன, லெப்டினன்ட் கேர்ணல் வையி. என் பலிபான, கொமாண்டர் அசங்க லங்காதிலக, லெப்டினன்ட் கேர்ணல் நலின் டி அல்விஸ், லெப்டினன்ட் கொமாண்டர் சி.பீ விஜயபுர மற்றும் சாதாரன போர் வீரனான டப்ள்யூ. ஜே விக்ரமசிங்க போன்றோர் பலியானர்.

இவர்களது 28 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது தலைமையில் இந்த நிகழ்வானது அராலி பகுதியில் இவர்களது நினைவு தூபிகள் அமைக்கப்பட்ட வளாகத்தினுள் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு யாழ் படைத் தளபதி அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்து நினைவு தூபிகளுக்கு மலரஞ்சலிகளை செலுத்தி கௌரவ மரியாதையை வழங்கி வைத்தார்.

மேலும் அநுராதபுர நகர பகுதியில் அமைந்துள்ள லெப்டின ன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ நினைவுச் சிலை வளாகத்தினுள் படைக்கலச் சிறப்பணியின் படைத் தளபதி அவர்களின் தலைமையில் வருடாந்த நினைவு கூறும் நிகழ்வு இடம்பெற்றது. அத்துடன் அன்றைய தினம் சேவா வனிதா பிரிவினால் படைக்கலச் சிறப்பணி தலைமையகத்தில் போதி பூஜா சமய வழிபாடுகள் இடம்பெற்றன. அச்சந்தர்ப்பத்தில் மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொபேகடுவ அவர்களது பாரியாரான திருமதி லலி கொபேகடுவ அவர்களும் இணைந்து கொண்டார்.

அராலி பகுதியில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் படை வீரர்கள் பங்கேற்றுக் கொண்டனர். trace affiliate link | 【国内5月2日発売予定】ナイキ ウィメンズ エアマックス ココ サンダル 全4色 - スニーカーウォーズ