Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th April 2020 19:57:30 Hours

வெலிசரை கடற்படை முகாமில் கோவிட்-19 தொற்றுக்குள்ளானவர்கள் 180 ஆக அதிகரிப்பு –நொப்கோ தலைவர் தெரிவிப்பு

ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று மதியம் (27) சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னிஆராச்சி, கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன, மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

பங்காளதேசம், டாக்காவில் இருந்து இன்று 27 ஆம் திகதி மாலை யுஎல்-190 விமானத்தினூடாக முப்படையினர்,அரச அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் உட்பட மொத்தமாக 74 பேர் இலங்கை வரவுள்ளதோடு, அவர்கள் அனைவரும் இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் பூனாணை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இன்று 27 ஆம் திகதி வரைக்கும் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 4512 தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

அதேபோல், ஞாயிற்றுக்கிழமை 26 ஆம் திகதி கடற் படையினரின் 58 குடும்ப உறுப்பினர்கள் மிஹிந்தலை மற்றும் நிபுன பூச தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்ட்டுள்ளனர். அடுத்த குழுவினர் தனிமைப்படுத்தலுக்காக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்டவுள்ளனர். தற்பொழுது முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3141 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

வெலிசரை கடற் படை முகாமில் கோவிட்-19தொற்றினால் பாதிக்கப்பட்ட கடற் படையினரின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.அதில் 112 பேர் முகாமிற்குள்ளேயும் 68 பேர் தங்களது விடுமுறையில் இருக்கும் போது இனங்காணப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை 26 ஆம் திகதி எங்களினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய, விடுமுறை சென்றுள்ள முப்படையினரும் தங்களது வேளைத் தளத்திற்கு திரும்பச் செல்வதற்கான செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன. www.covid19govt.lk எனும் புதிய வெப்தளத்தினூடாக நொப்கோவானது கோவிட்-19 மற்றும் அதனுடைய திலவரம் தொர்பான அனைத்து தகவலகளையும் வழங்கும்” என லெப்டினன் ஜெனரல் சில்வா மேலும் தெரிவித்தார்.

இலங்கை கடற்படை கோவிட்-19 தொற்றுக்குள்ளானவர்கள் -180

முகாமிற்குள் தொற்றுக்குள்ளானவர்கள்-112

விடுமுறை சென்றவர்களில் தொற்றுக்குள்ளானவர்கள்-68

கீழே காணொளியின் முழு விபரம் Best jordan Sneakers | Asics Onitsuka Tiger