Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th June 2019 18:03:40 Hours

கிளிநொச்சியில் இடம்பெற்ற 'Shopping Spree-2019' கண்காட்சி

முதன் முறையாக கிளிநொச்சி சுபசாதனை கடைத் தொகுதி வளாகத்தினுள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி வி ரவிப்பிரிய அவர்களது எண்ணக்கருவிற்கமைய 573 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டுடன் 'Shopping Spree-2019' கண்காட்சிகள் இம் மாதம் (23) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த கண்காட்சிகளில் அதிநவீன விலையில் உள்ள ஆடைகள், ஆபரணங்கள், கைத்தொழில் பொருட்கள் முன் வைக்கப்பட்டிருந்தன.

இந்த புதிய முயற்சி திட்டமானது கிளிநொச்சி வணிக சமூகம் மற்றும் இராணுவத்தினருக்கிடையே நல்லினக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டன. மேலும் கண்காட்சி நிலையத்தில் பொருட்கள் நியாயமான விலையில் விற்கப்பட்டன.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த கண்காட்சிக்கு வருகை தந்து பலவிதமான வீட்டுத் தேவைகள் மற்றும் உடைகள் போன்றவற்றை வாங்கிச் சென்றனர்.

கண்காட்சி நிகழ்விற்கு பிரதம அதிதியாக 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஏ எஸ் ஹேவாவிதாரன அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார். மேலும் 573 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மற்றும் இராணுவ சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

இந்த கண்காட்சி நிகழ்விற்கு தனியார் நிறுவனங்களது ஒத்துழைப்பும், பொது மக்களது பங்களிப்பும், இன்னிசை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. latest Running Sneakers | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ