Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th June 2019 09:18:40 Hours

56 ஆவது படைப் பிரிவிற்கு புதிய படைத் தளபதி நியமிப்பு

கொக்கிலய பகுதியில் அமைந்திருக்கும் 56 ஆவது படைப் பிரிவின் 19 ஆவது புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் பூரக செனவிரத்ன அவர்கள் இம் மாதம் (20) ஆம் திகதி தனது புதிய பதவியை உத்தியோகபூர்வமாக சமய அனுஷ்டான ஆசிர்வாதத்துடன் பொறுப்பேற்றார்.

இதற்கு முன்பிருந்த படைத் தளபதியான மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடம்பிடிய அவர்களது இடமாற்றத்தின் நிமித்தம் இந்த பதவிக்கு மேஜர் ஜெனரல் பூரக செனவிரத்ன அவர்கள் நியமிக்கப்பட்டார்.

புதிய படைத் தளபதிக்கு படைப் பிரிவு வளாகத்தினுள் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார். பின்னர் தலைமையக வளாகத்தினுள் மரநடுகையும் படைத் தளபதியால் மேற்கொள்ளப்பட்டு பின்னர் பொறியியல் சேவைப் படையணி மற்றும் மின்சார பொறியியல் படையணி பிரிவுகளுக்கான வேலைப் பட்டறை கட்டிடங்கள் நிர்மானிப்பதற்காக அடிக்கல்களை நட்டு வைத்தார்.

இறுதியில் படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசார நிகழ்விலும் கலந்து கொண்டார். இச்சந்தர்ப்பத்தில் 561, 563 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதிகள், படையணியின் கட்டளை அதிகாரிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர். Sports brands | Trending