Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th March 2019 14:34:30 Hours

இராணுவ பொறியியலாளர் சேவைப் படையணியினரால் நிர்மானிக்கப்பட்ட சிறுநீரக பராமரிப்பு நிலையம்

இலங்கை இராணுவ 2 ஆவது பொறியியலாளர் சேவைப் படையணியின் 200 படையினரது பங்களிப்புடனும் கடற்படை மற்றும் விமானப் படையினரது பங்களிப்புடன் அநுராதபுரத்தில் நிர்மானிக்கப்பட்ட 4 மாடிக் கட்டிடமான ‘மெத்சிறி செவன’ சிறுநீரக பராமரிப்பு நிலையம் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இம் மாதம் (20) ஆம் திகதி பௌர்ணமி தினமன்று திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலனியின் எண்ணக்கருவிற்கமைய இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகவின் வழிக்காட்டலின் கீழ் 2016 ஆம் ஆண்டு இந்த கட்டிட நிர்மான பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

புதிதாக நிரமானிக்கபட்ட இந்த பராமரிப்பு நிலையத்தில் இரண்டு வாட்டுக்கள், 23 கட்டில்கள், ஆலோசனை அறைகள்,மீயாய்வு அறை, மருத்துவ வசதிகள் கொண்ட அறை, சோலார் பேனல்களை முழுமையாக செயல்படுத்தக்கூடிய அறைகளை கொண்டு 437 மில்லியன் ரூபாய் செலவில் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நிதி மூலம் நிர்மானிக்கப்பட்டது.

2 ஆவது பொறியியலாளர் சேவைப் படையணியின் கட்டளை தளபதியும் திட்ட மேலாளர் லெப்டினன்ட் கேர்ணல் சாமல மகேந்திர, கெப்டன் நிஷாந்த நாணாயக்கார ,லெப்டினன்ட் ஜே.பீ சுரவீர, லெப்டினன்ட் பியுமல் சமரசேகர போன்ற அதிகாரிகளின் தலைமையில் இந்த பராமரிப்பு நிலையம் நிர்மானிக்கப்பட்டது.

புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது2000 உள்நாட்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்கப்பட்டது. அத்துடன் ஜனாதிபதி அவர்களினால் ஐந்து நோயாளிகளுக்கு நன்கொடைகளும்வழங்கப்பட்டது.மேலும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் பயன்படுத்தக்கூடிய 200 நீரழிவு நோய் பரிசோதனை உபகரணங்கள், 200 இரத்த அழுத்த சோதனை உபகரணங்கள் மேன்மை தங்கிய ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.

அநுராதபுர போதனா வைத்தியசாலையில் நெப்ராலஜி மற்றும்டிராபக்சேஷன் திணைக்களத்தின் பணிப்பாளர் அற்பணிப்புடன் பணிபுரிந்து ஜனாதிபதியின்இந்த திட்டத்திற்குCES மற்றும் ஏனைய ஆதரவாய் செயற்பட்ட படையினருக்கும் ஒத்துழைப்பை வழங்கினார்.

இந்த நிகழ்வில் இராணுவ தளபதி லெப்படினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக, கடற்படைத் தளபதி வயிஷ் அத்மிரால் பியல் த சில்வா, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா மற்றும் முப்படையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டு இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த மேன்மை தங்கிய ஜனாதிபதியுடன் குழுப் புகைப் படத்திலும் இணைந்திருந்தனர். Best Authentic Sneakers | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ